ஐபிஎல் 2025

பிரியன்ஸ் ஆர்யாவுக்கு பயிற்சியே வேண்டாம்னு ஸ்ரேயாஸ் பாண்டிங் சொல்லிட்டாங்க.. அவர் ரோல் இதுதான் – கோச் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்தில் சதம் அடித்து அசத்திய பிரியன்ஸ் ஆர்யாவின் சிறு வயது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் அவர் குறித்து நிறைய தகவல்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜை குருஜி என்று அழைப்பார்கள். மேலும் இவர் கௌதம் கம்பீர் மற்றும் அமீத் மிஸ்ரா போன்ற பெரிய வீரர்களுக்கு பயிற்சியாளராக ஆரம்ப கட்டங்களில் இருந்து உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் கோச் ஹாடின் சொன்ன தகவல்

நேற்று போட்டியில் நடந்து கொண்டிருக்கும் பொழுது பேசிய பஞ்சாப் பயிற்சியாளர் பிராட் ஹாடின் கூறும்பொழுது ” இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக நாங்கள் ஒரு பயிற்சி போட்டியில் விளையாடினோம். அதில் மொத்தமாக பிரியன்ஸ் ஆர்யா 8 பந்துகள் மட்டுமே விளையாடினார். அவர் விளையாடிய அந்த எட்டு பந்துகளை அவரை நாங்கள் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்பதற்கு போதுமானதாக இருந்தது. அந்தளவிற்கு அவர் சிறப்பாக இருந்தார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரியன்ஸ் ஆர்யாவின் சிறுவயது சஞ்சய் பரத்வாஜ் காலை ஏழு முப்பது மணிக்கு தனக்கு பிரியன்ஸ் ஆர்யா தொலைபேசியில் அழைத்ததாகவும், நேற்று என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றும், தான் எதுவும் செய்யவில்லை கடவுள் தான் எல்லாம் செய்தார் என்று கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

பயிற்சியை வேண்டாம் என்று சொன்னார்கள்

மேலும் பேசி உள்ள சஞ்சய் பரத்வாஜ் கூறும்பொழுது ” கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருவரும் தனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு அளிக்கிறார்கள் என பிரியன்ஸ் ஆர்யா என்னிடம் கூறினார். மேலும் அவர்கள் இவருடைய உள்ளுணர்வை நம்பி எப்பொழுதும் விளையாடும் படி கூறி இருக்கிறார்கள். மேலும் அவருக்கு பயிற்சி தேவை இல்லை என்றும் கூறி விட்டார்கள்”

இதையும் படிங்க : 12 பந்தில் 27 ரன்.. தோனி இத செஞ்சிருந்தா ஈஸியா ஜெயிச்சி இருக்கலாம்.. ஏன் முடியல? – சைமன் டால் கேள்வி

“அவர் கட் மற்றும் புல் ஷாட்டில் என்னிடம் நிறைய பயிற்சி செய்தார். ஏனென்றால் அவர் வந்த பொழுதே ஒரு தொடக்க வீரராக கருதப்பட்டார். அவர் இந்த வகையான ஷாட்களில் கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. அவர் 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை சந்திக்க வேண்டி இருந்தது. எனவே இதற்காக அவர் வேலை செய்ய வேண்டியதும் இருந்தது. ஆனால் அவருக்கு இயல்பிலேயே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by