நாங்க முதல்ல இத செஞ்சிருக்கணும்.. ஆனா இந்த 2 விஷயத்தை வச்சு எப்படி மேல வரோம்னு பாருங்க – இந்திய பவுலிங் கோச் பேட்டி

0
189

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் மோசமான முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கால் தற்போது சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

சிக்கலான நிலைமையில் இந்திய அணி

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் வெற்றி பெற வேண்டிய முக்கியமான கட்டத்தில் இரண்டாவது போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் குவித்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணியை விட பெரிய ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், நியூசிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சால் இந்திய அணி 156 ரன்கள் மட்டுமே குவித்து தற்போது வெற்றி விகிதத்தில் பின்தள்ளி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒரு அணி வெற்றி பெறுவதற்கு முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற வேண்டியது அவசியம் எனவும், இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வலுவான பேட்டிங்கால் திரும்பவும் நல்ல நிலையை அடைய முடியும் என்று இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறி இருக்கிறார்.

- Advertisement -

எப்படி மீண்டும் வருவது என்று தெரியும்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே ஒரு அழுத்தமான நிகழ்வை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை முதல் இன்னிங்ஸில் ரன்கள் எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். எங்களது பேட்டிங் வரிசையில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். அவர்களது தனித்தன்மை என்ன என்பது தெரியும். எனவே எந்த முறையில் விளையாடி சாதகமான முடிவை பெறுவது என்பது குறித்தும் தெரியும்.

இதையும் படிங்க:இது சரியில்ல..டிகே அத பேசாதிங்க.. ஆஸி பத்தி இனிமே நம்ம கிட்ட வந்து கேட்கட்டும் – கவாஸ்கர் கோபம்

அந்தத் தவறை சரி செய்ய முடியும் என்று நம்புகிறோம். அதனை சரி செய்வதற்கு அவர்களுக்கு போதுமான அனுபவம் மற்றும் அறிவு இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எங்களது இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான பதிலடியுடன் முன்னேறுவதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் இந்த சூழ்நிலை மற்றும் நிலைமைகளை அவர்கள் எப்படி எதிர்கொண்டு விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறுகிறார்

- Advertisement -