இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு தற்பொழுது இடையில் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி அடுத்து என்ன மாதிரி பயிற்சியை அமைக்க இருக்கிறது என்பது குறித்து மோர்னே மோர்கல் கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் ரகசிய பயிற்சி
இந்த முறை ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் பயிற்சியை பார்ப்பதற்கு பொதுமக்கள் மற்றும் மீடியாவுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும் மீடியா ட்ரோன் அனுப்பி படம் பிடிக்கும் என்பதால் பயிற்சி செய்யக்கூடிய இடத்தை கருப்பு கவர் செய்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகவும் கண்டிப்புடன் இருந்து வருகிறது.
தற்போது இந்திய அணியின் இந்த பயிற்சி முறை பலராலும் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இப்படியான பயிற்சியால் இந்திய அணிக்கு எந்தவித நல்லதும் நடக்காது என மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருந்தார். இன்று பாகிஸ்தான் முன்னால் வீரர் பசித் அலி தன்னம்பிக்கை குறைபாட்டின் காரணமாகவே இந்திய அணி இவ்வாறு பயிற்சி செய்வதாக விமர்சனம் செய்திருந்தார்.
பெரிய இதயம் கொண்டவர்
மோர்னே மோர்கல் பேசும் பொழுது “முகமது சிராஜ் ஒரு பெரிய ஜாம்பவான் வீரர். அவர் பெரிய இதயம் கொண்டவர். மேலும் தாக்குதல் மனநிலையுடன் விளையாட கூடியவர். இந்த சுற்றுப்பயணத்தில் அவர் எப்படி விளையாட போகிறார் என்பதை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். கடந்த சுற்றுப்பயணத்தில் அவர் மிகவும் கடினமானவராக இருந்தார். இப்பொழுது முக்கிய சுற்றுப்பயணத்தில் அவர் முக்கிய வீரராக வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி”
இதையும் படிங்க : எதுக்கு இத போய் மறைக்கறிங்க.. இந்திய அணி கிட்ட தன்னம்பிக்கையே இல்லை – பாகிஸ்தான் பசித் அலி விமர்சனம்
“நாங்கள் 22 ஆம் தேதி முதல் போட்டி விளையாட இருக்கிறோம். இதற்கு நடுவில் நாங்கள் மூன்று பயிற்சி அமர்வுகளை நடத்த இருக்கிறோம். இந்த பயிற்சி அமர்வு இன்று மாலை அல்லது நாளை முதல் ஆரம்பிக்கும். இங்கிருந்து நாங்கள் எங்களுடைய விளையாட்டு திட்டங்களை பார்க்க ஆரம்பிப்போம். 22ஆம் தேதி துவங்கும் ஆட்டத்திற்கு சிறந்ததை எப்படி கொண்டு வரப் போகிறோம் என்பது குறித்து நாங்கள் அலசுவோம்” என்று கூறி இருக்கிறார்.