எதுக்கு இத போய் மறைக்கறிங்க.. இந்திய அணி கிட்ட தன்னம்பிக்கையே இல்லை – பாகிஸ்தான் பசித் அலி விமர்சனம்

0
39
Basit

தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியின் தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கொடுத்த பயிற்சி போட்டியை மறுத்துவிட்டது. இது மட்டும் இல்லாமல் இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியையும் மறுத்து இருந்தது. தற்பொழுது மீண்டும் இந்திய ஏ அணிக்கான பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ விதித்த கட்டுப்பாடுகள்

இந்த முறை ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி போட்டியில் விளையாட வில்லை என்பது மட்டும் இல்லாமல், இந்திய அணி பயிற்சியில் ஈடுபடுவதை பார்ப்பதற்கு ஆஸ்திரேலிய பொது மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பிசிசிஐ இந்திய அணியின் பயிற்சியை வெளியில் யாருக்கும் காட்டக்கூடாது என்று உத்தரவிட்ட இருந்தது.

இது மட்டும் இல்லாமல் மீடியாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் கருப்பு கவர் கொண்டு மறைக்கப்பட்டு இந்திய அணியின் பயிற்சி நடைபெற்றது. இது ஆஸ்திரேலியா தரப்பில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் இந்திய அணிக்கு எதிராக மட்டுமில்லாமல் ஆதரவாக வருவதையும் இது தடுத்து இருக்கிறது. மேலும் விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது வீணடிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியிடம் தன்னம்பிக்கை இல்லை

இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “இந்திய அணி இடம் தன்னம்பிக்கை இல்லை. இதனால்தான் அவர்கள் ரகசிய பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய வழக்கமான முறையில் விளையாடுங்கள். இவர்கள் பயிற்சி போட்டியில் விளையாடினால் காயம் அடைந்து விடுவோம் என்று விளையாடாமல் இருக்கிறார்கள்”

“ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு இந்திய அணி சரியான தயாரிப்பில் ஈடுபடவில்லை. இவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு 12 நாட்கள் இல்லை 12 மாதங்கள் முன்னால் சென்றாலும் கூட தற்பொழுது செய்து வரும் தயாரிப்பு சரியானது கிடையாது. நீங்கள் ஆஸ்திரேலியா அணியை சமாளிக்க வேண்டும் என்றால் அவர்களது பந்துவீச்சை சமாளிக்க வேண்டும். எனவே நீங்கள் பயிற்சி போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்”

இதையும் படிங்க : இந்தியாவில் உலக கோப்பையில் அவமானப்பட்டோம்.. அதனால இப்ப திருப்பி செய்றோம் – தீக்சனா பேட்டி

“உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணி மிகவும் அபாயகரமான அணி. தற்பொழுது இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளையும் தோற்று வருகிறது. இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கை மிகவும் குறைவாக இதனால் காணப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -