நாட்டு நாட்டு பாட்டு ஸ்டைலில் தொடர் நாயகன் விருதை இருவரும் வென்று அசத்தல்!

0
754
BGT

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தியாவில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது!

இந்தத் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, ரோகித் சர்மாவின் சதம் ஆகியவற்றால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இரண்டாவது போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அஸ்வின் ஜடேஜா பந்துவீச்சு மற்றும் அக்சர் பட்டேல் பேட்டிங் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தது. இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை தொடர்ந்து நான்கு முறை தக்க வைத்த பெருமை இந்தியா அணிக்கு கிடைத்தது.

இதற்கடுத்து தர்மசாலாவில் இருந்து மாற்றப்பட்டு இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு மிக சாதகமாக பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. இந்திய அணி தான் விரித்த வலையில் தானே விழுந்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை சந்தித்தது.

இதற்கு அடுத்து தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற, இந்த போட்டியில் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்க, ஆஸ்திரேலியா அணி தரப்பில் கவாஜா, கிரீன், இந்திய அணி தரப்பில் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரது சதங்கள் போட்டியை டிராவுக்கு கொண்டு வந்தன. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான ஆட்டநாயகன் விருதை 86 ரன்கள், 25 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வினுக்கும், 135 ரன்கள் 22 விக்கட்டுகளை கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜாவுக்கும் சேர்த்து அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இருவரும் கூட்டாக பேசுகையில் முதலில் பேசிய அஸ்வின்
“இது ஒரு சிறந்த பயணம். நாங்கள் ஒருவர் இல்லாமல் ஒருவர் இந்த இடத்தில் இல்லை. பந்துடன் நான் ஆக்கபூர்வமாக களத்தில் செயல்பட எனக்கு அவர் சுதந்திரம் தருகிறார். அவருக்கு பாராட்டு. டெல்லியில் அவர் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் நாங்கள் இப்பொழுது இங்கே நிற்கிறோம்! என்று கூறி இருக்கிறார்!

இதைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா பேசுகையில் ” நாங்கள் எப்பொழுதும் விக்கட்டை பற்றி பேசுகிறோம். ஒரு குறிப்பிட்ட பேட்டருக்கு எதிராக களம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்று பேசுகிறோம். நாங்கள் எப்போதும் இப்படி பேசி விவாதித்துக் கொண்டே இருப்போம். இந்தத் தொடரில் எனது பேட்டிங்கில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. நான் சில சந்தர்ப்பங்களில் தவறவிட்டேன். நான் அடுத்தடுத்த ஆட்டங்களில் எனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி கடினமாக உழைப்பேன் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்!