“அவங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டாங்க” – தென் ஆப்பிரிக்கா அணியின் ரகசியத்தை புட்டு வைத்த ஏபி டிவில்லியர்ஸ்.!

0
2656

உலக கிரிக்கெட்டில் மார்டன் டே லெஜெண்டாக விளங்கியவர் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரருமான மிஸ்டர் 360 டிகிரி ஏபி.டிவில்லியர்ஸ். கிரிக்கெட் மைதானத்தில் இவரால் செய்ய முடியாத சாகசங்கள் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அத்தனை துறைகளிலும் கலக்கும் ஏபி.டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார்.

தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். ஆர்சிபி அணி இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஜிம்பாப்வே அணியின் கேப்டனுமான ஆன்டி ஃபிளவரை புதிய தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் அறிவித்தது. இதற்கான நிகழ்ச்சியில் அந்த அணியின் ஆலோசகராக பணியாற்றி வரும் ஏபி.டிவில்லியர்ஸ் கலந்து கொண்டார். அப்போது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோருக்கு இடையேயான உறவு ஒரு அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை தெரிவித்தார்.

- Advertisement -

ஆர்சிபி அணியின் கேப்டனாக இருக்கும் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் பஃப் டுப்ளசிஸ் மற்றும் ஆன்டி பிளவர் இருவரும் 2021 ஆம் ஆண்டு கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கின்றனர். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. இது ஆர் சி பி அணியை ஆரோக்கியமான பாதையில் புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்று தெரிவித்தார். மேலும் அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டால் அது வீரர்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் பேசினார் .

அப்போது தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலகட்டங்களில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்த கிரேம் ஸ்மித் மற்றும் அப்போதைய பயிற்சியாளராக இருந்த ரே ஜென்னிங்ஸ் இருவருக்கும் இடையேயான உறவு தென்னாப்பிரிக்கா அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து பேசி இருக்கிறார் .

இது குறித்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ் ” நான் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடிய போது அணிக்கு கேப்டனாக கிரேம் ஸ்மித் இருந்தார். மேலும் பயிற்சியாளராக ரே ஜெனிங்ஸ் பணியாற்றினார். இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். அப்படி இருவரும் பேசிக் கொண்டால் அது சண்டையில் போய்தான் முடியும். இது அணி என்ற ட்ரெஸ்ஸிங் ரூமில் எதிர்மறையான சில தாக்கங்களை ஏற்படுத்தவும் செய்தது. நாங்கள் பெரும்பாலும் எங்களுடைய கலந்துரையாடலை கேப்டன் ஸ்மித் உடனே வைத்துக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” ஸ்மித் மற்றும் ரே ஜென்னிங்ஸ் இருவருக்கும் இடையேயான உறவு அவ்வளவு சமூகமாக இல்லை என்றாலும் அது அணியை பெரிதளவில் பாதிக்கவில்லை என்றே நினைக்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் ரே வழங்கிய பயிற்சி முறைகள் பிடித்திருந்தது. கேப்டன் ஸ்மித்தும் பயிற்சிகளிலும் ஈடுபடுவார். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டார்கள். இது வித்தியாசமாகவும் அதே நேரம் சுவாரசியமாகவும் இருந்தது” என்று தெரிவித்தார் மேலும் ஒரு அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கிடையையான உறவு முறை அணியில் பல மாற்றங்களை கொண்டு வரும் என தெரிவித்த அவர் தற்போதைய ஆர்சிபி அணியின் கேப்டன் டுப்லசிஸ் மற்றும் ஆன்டி பிளவர் இடையேயான உறவு நன்றாக உள்ளது இதன் காரணமாக ஆர்சிபி அணியின் ஐபிஎல் வரலாற்றில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் என தெரிவித்தார் .

2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு ரே ஜென்னிங்ஸ் தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.ஆனால் அவரது பயிற்சி காலம் ஒரு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது . ஸ்மித் அடுத்த பத்தாண்டுகளுக்கு தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்திருந்த தென்னாப்பிரிக்க அணி ஸ்மித் தலைமையில் தான் மீண்டும் டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.