இந்திய கிரிக்கெட் அணி வருகிற 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ள நிலையில் அதற்காக தற்போது ஆஸ்திரேலியாவில் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகன் இந்த டெஸ்ட் தொடரில் சுவாரசியமூட்டும் பகுதிகள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றி மூன்றாவது முறையாக கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணியும் இந்த முறை இந்திய அணியிடம் இருந்து கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தத் தொடரில் குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிலும் கம்மின்ஸ் பந்துவீச்சில் விராட் கோலி ஐந்து முறை ஆட்டமிழந்திருக்கிறார் என்பதால் அவர்கள் இருவருக்கும் இடையேயான நிகழ்வு சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய பந்துவீச்சாளர் பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் இந்த இரண்டு நிகழ்வுகளும் பார்டர் கவாஸ்கர் தொடரில் சுவாரசியமாக இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
டெஸ்ட் தொடரில் இரு சுவாரசியமூட்டும் விஷயங்கள்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கம்மின்ஸ் மற்றும் கோலி ஆகியோருக்கிடையான ஆட்டம் சுவாரசியமாக இருப்பதாக கருதுகிறேன். மேலும் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர் பும்ரா பந்து வீசும் நிகழ்வும் சுவாரசியமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ட்ராவிஸ் அதை முயற்சி செய்து அதை கடந்து செல்வார். அதுமட்டுமல்லாமல் பும்ரா முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க:2025 WTC பைனல்.. இலங்கை கிரிக்கெட் மாஸ்டர் பிளான்.. இந்திய அணிக்கு சாதகமான நிலைமை.. புதிய தகவல்கள்
ரோஹித் சர்மா எப்போது வருவார் என்று தெரியவில்லை. பும்ரா உலகின் சிறந்த பந்துவீச்சாளராக இருப்பதால் அத்தகைய மோதலை காண நான் மிகவும் காத்திருக்கிறேன்” என்று மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ட்ராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். எனவே அதற்கு பதிலடி தரும் முனைப்பாக இந்திய அணி இதில் விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.






