மலரும் நினைவுகள் 2011 :சச்சின் டெண்டுல்கரின் அபாரமான ஆட்டத்தால் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

0
186

2011 ஆம் ஆண்டிற்கான ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியா பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்தியது. 14 அணிகள் கலந்து கொண்ட இந்த உலக கோப்பையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இரண்டு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

பங்களாதேஷின் மிர்பூரில் நடைபெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி பத்திரிக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை மூன்று உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் முதலாக வெளியேற்றி அரை இறுதிக்கு முன்னேறியது .

- Advertisement -

2011 ஆம் வருடம் மார்ச் 30 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி நகரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை அரை இறுதி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்காக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இணைந்து இந்தியா அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். அணியின் எண்ணிக்கை 48 ஆக இருந்தபோது 35 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த வீரேந்திர சேவாக்,வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து சச்சின் உடன் இணைந்த கௌதம் கம்பீர் 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடி உலகக்கோப்பை போட்டியில் தனது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஜ்மல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இறுதி ஓவர்களில் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆட இந்தியா 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 36 ரன்கள் எடுத்திருந்தார்.பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வஹாப் ரியாஸ் சிறப்பாக வந்து வீசி 46 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்தியாவின் அபார பந்து வீச்சினால் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏப்ரல் இரண்டாம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் மிஸ்பா உல் ஹக் 56 ரன்களும் முகமது ஹாபிஸ் 43 ரண்களும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் ஜாகீர் கான்,ஆசிஸ் நெக்ரா,முனாப் பட்டேல், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சச்சின் டெண்டுல்கர் இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -