நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி விளையாடிய போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய மெகா சாதனையை படைத்திருக்கிறார்.
நேற்று இரு அணிகளுக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டி ரசிகர்களுக்கு மிகவும் சுவாரசியமாக அமைந்த போட்டியாக இருந்தது. கடைசி ஓவர் கடைசி பந்து வரை வெற்றி யார் பக்கம் என்று முடிவாகாமல் இருந்தது. இறுதியில் ஆர்சிபி அணி வென்றது.
முக்கிய முடிவு எடுத்த ஆர்சிபி
நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் பந்து வீச்சு யூனிட்டை வலிமையாக உருவாக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தது. இதன் காரணமாக புவனேஸ்வர் குமார் மற்றும் கேசில்வுட் இருவரையும் குறி வைத்து வாங்கி வந்தது. நேற்று இருவருமே பரபரப்பான போட்டி நேரத்தில் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா திடீரென அதிரடியை ஆரம்பிக்க, அவருக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை மறுமுனையில் அதிரடியாக திலக் வர்மா கொடுத்தார். இதில் திலக் வர்மா விக்கெட்டை புவனேஸ்வர் குமார் இறுதியில் கைப்பற்றினார். கேசில்வுட் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தினார். இதுவே அவர்கள் போட்டியை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.
புவனேஸ்வர் குமார் மெகா சாதனை
நேற்று புவனேஸ்வர் குமார் திலக் வர்மா விக்கெட்டை கைப்பற்றியதும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தை பிடித்தார். புவனேஸ்வர் குமார் 179 இன்னிங்ஸ்களில் 184 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இவருக்கு முன்பாக முன்னாள் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் மற்றும் தற்போது கேகேஆர் அணியின் மெண்டர் டுவைன் பிராவோ 158 இன்னிங்ஸ்களில் 183 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் இருந்தார். தற்போது புவனேஸ்வர் குமார் இந்த சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி பயிற்சியில் கதறி அழுதேன்.. நான் கேட்ட அதை கொடுக்கல – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர்கள்:
184* – புவனேஷ்வர் குமார் (179 இன்ஸ்)
183 – டுவைன் பிராவோ (158 இன்ஸ்)
170 லசித் மலிங்கா (122 இன்னிங்ஸ்)
165* – ஜஸ்பிரித் பும்ரா (134 இன்ஸ்)
144 உமேஷ் யாதவ் (147 இன்ஸ்)






