யூபி டி20 2024.. எல்லாரையும் விட பெரிய தொகைக்கு போன புவனேஸ்வர் குமார்.. புது ரெக்கார்ட்

0
5209

இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் தொடரான உத்தர பிரதேச டி20 லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்கான ஏலம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணியின் ஸ்விங் கிங் என்று அழைக்கப்படும் புவனேஸ்வர் குமார் லக்னோ ஃபால்கன்ஸ் அணிக்காக மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் பிரான்சிஸ் தொடரான உத்தரப்பிரதேச டி20 கிரிக்கெட் லீக் தொடர் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற உள்ளது. மொத்தமாக ஆறு அணிகள் பங்குபெறும் இந்தத் தொடரில் கடந்த சீசனில் காசி ருத்ராஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன் இரண்டாவது சீசன் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

இளம் வீரர்களை கண்டறிந்து திறமைகளை வளர்த்தெடுக்கும் விதமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் ஐபிஎல் நட்சத்திரங்களான நித்திஷ் ராணா, மொசின் கான், சிவம் மாவி, யாஷ் தயாள் மற்றும் அனுபவ வீரர்களான பியூஸ் சாவ்லா ஆகியோரும் பங்கு பெற இருக்கின்றனர். கடந்த சீசனில் ரிங்கு சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் விளையாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் ஏலத்தில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த புவனேஸ்வர் குமார் இந்தத் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக மாறி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த சீசனில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய புவனேஸ்வர் குமார் இந்த சீசனில் லக்னோ ஃபால்கன்ஸ் அணி இவரை 30.25 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது. இது இந்த தொடரின் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரராக புவனேஸ்வர் குமார் தற்போது மாறி இருக்கிறார். எனவே வரவிருக்கும் இந்த சீசனில் புவனேஸ்வர் லக்னோ அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரரான புவனேஸ்வர் குமார் தற்போது ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் அணியால் 2021ஆம் ஆண்டு 4.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாகவே புவனேஸ்வர் குமார் தனது சிறந்த பந்துவீச்சினை சன்ரைசர்ஸ் அணிக்காக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:என்ன அவங்க ரொம்ப நம்புறாங்க.. அதான் எனக்கு இத பண்றாங்க.. ஆட்டநாயகன் ரவி பிஷ்னாய் பேட்டி

இந்திய அணியிலும் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்த இவர் காயத்தால் பெரும் அவதிப்பட்டார். தற்போது அதிலிருந்து முன்னேறி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இந்திய அணியிலும் விரைவில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -