இவரை மட்டுமே நம்பி போகாதீங்க – இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

0
101
Harbajan singh

ஆசியக் கோப்பை போட்டி நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் மூலமாக துவங்கியது. தற்பொழுது நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை தொடர் 15வது ஆசிய கோப்பை தொடர் ஆகும்.

நேற்று இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் அபார பந்து வீச்சை தாங்க முடியாமல் இலங்கை அணி 105 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது துவக்க ஆட்டக்காரர்களின் அதிரடி ஆட்டத்தால் 10.1 ஓவரில் மிக எளிதாக இலங்கையை வீழ்த்தி ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது!

- Advertisement -

ஆசிய கோப்பையில் என்று மிகப்பெரிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி நடக்கும் துபாய் சர்வதேச மைதானத்தில் தான் 10 மாதங்களுக்கு முன்பு டி20 உலக கோப்பையில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியைச் சந்தித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன ஜஸ்பிரித் பும்ரா முகமது சமி ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெறவில்லை. இதில் இருவருக்கும் காயம், ஆனால் முகமது சமி உடற்தகுதி யோடு இருந்தும் அவரை தேர்வு செய்யாதது அப்போதே விமர்சனத்துக்குரிய ஒன்றாகத்தான் இருந்தது. இந்த முறை ஆசிய கோப்பை இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக புவனேஸ்வர் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே இடம் பெற்று உள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சில முக்கியமான கருத்துகளையும் தனது அச்சங்களையும் இந்திய அணியிடம் பகிர்ந்து இருக்கிறார். ஆக அவர் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் துறை மிக பலவீனமாக இருப்பதாக கருதுகிறார்.

- Advertisement -

ஹர்பஜன் சிங் இதைப்பற்றி கூறும் பொழுது ” இந்திய அணி அவர்களின் பெரிய துப்பாக்கிகளான ஜஸ்பிரித் பும்ரா முகமது சமி இருவரும் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் இருவரும் ரோகித் சர்மா விராட் கோலி போல இந்திய அணிக்கு பெரியவர்கள். இவர்கள் இருவரும் விளையாடாவிட்டால் இந்திய அணி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தற்போது முகமது சமி ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் அப்படித்தான் இருக்கிறது ” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பந்து ஸ்விங் ஆகாத பொழுது வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் லைன் அண்ட் லென்தை பெறுவது முக்கியம் ஆனது. சூழ்நிலைகள் சாதகமாக இல்லாவிட்டால் அதற்கு ஏற்றார் போல் நாம் மாறிக்கொள்ள வேண்டும். புவனேஸ்வர் குமார் பந்தை இருபுறமும் நல்ல முறையில் ஸ்விங் செய்யக்கூடியவர். ஆனால் துபாயின் சூழ்நிலை பந்தை ஸ்விங் ஆக விடாது” என்று அச்சம் தெரிவித்துள்ளார்!

இதே மைதானத்தில் கடந்த டி20 உலக கோப்பையில் புவனேஸ்வர் குமார் பந்தை ஸ்விங் செய்ய முடியாமல் திணறியதை நாம் பார்த்தோம். அவரை வெகு எளிதாக பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் விளையாடி சுலபமாக ரன் சேர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.