பெங்களூரு அணி அடுத்த ஆட்டத்தை வெல்ல தேவையான 11 வீரர்கள்

0
97
RCB

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி அமீரக மைதானங்களில் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக தள்ளிப் போன இந்த தொடர் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு அப்படியாக மகிழ்ச்சி எதுவும் வரவில்லை. காரணம் பெங்களூரு அணி இரண்டாவது பகுதி ஐபிஎல் முதல் போட்டியிலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது பெங்களூரு அணி. கேப்டன் கோலியும் இந்த ஆண்டு தொடர் முடிந்த பின்புதான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதனால் கேப்டன் கோலி கோப்பையுடன் தலைமைப் பதவியை விட வேண்டும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அடுத்து வரும் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கு எந்த பதினொரு வீரர்களுடன் சென்றால் சரியாக இருக்கும் என்று இப்போது பார்ப்போம்.

துவக்க வீரர்கள் – கோலி மற்றும் படிக்கல்

- Advertisement -

அடுத்த போட்டிக்கான துவக்க வீரராக கடந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களம் கண்ட கோழி மற்றும் படித்தல் என்ற இருவரையே களம் இறக்குவது நல்லது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியவர் படிக்கல். கேப்டன் கோலியும் பார்முக்கு வந்துவிட்டால் மிகச்சிறப்பான துவக்க வீரர்களாக இந்த இணை அமையும்.

மிடில் ஆர்டர் – பட்டிதார், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் மற்றும் முகமது அசாருதீன்

கடந்த போட்டியில் 3-வது வீரராக களம் கண்ட பரத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வேகமாக தொடர்ந்து பவுண்டரிகள் அடிப்பதில் அவருக்கு சிக்கல்கள் இருந்தது. அதனால் அவருக்கு பதில் ராஜத் பட்டிதாரை ஆட வைக்கலாம். அதேபோல மற்றொரு மிடில் ஆர்டர் வீரரான சச்சின் பேபி நன்கு விளையாடாத காரணத்தினால் அவருக்கு பதில் கேரள அணியின் விக்கெட் கீப்பர் முகமது அசாருதீனை களமிறக்கலாம். அசாருதீன் வேகமாக ரன்ஸ் எடுப்பதில் வல்லவர். மேக்ஸ்வெல் மற்றும் ஏபி டிவிலியர்ஸ் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தால் பெங்களூர் அணி நல்ல ஸ்கோரை எட்டலாம்.

- Advertisement -

ஆல்ரவுண்டர்கள் – ஹசரங்கா மற்றும் கைல் ஜமிசன்

கடந்த ஆட்டத்தில் விளையாடிய 2 ஆல் ரவுண்டர் நூலான இலங்கையைச் சேர்ந்த ஹசரங்கா மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த ஜெமிசன் என
இருவரையும் அடுத்த ஆட்டத்திலும் ஆட வைக்கலாம். தங்களின் முழு திறமையை வெளிப்படுத்த இருவருக்குமே கடந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்காததால் இந்த முறை அவர்கள் சிறப்பாக செயல்படலாம்.

பந்து வீச்சாளர்கள் – சிராஜ், சஹால் மற்றும் ஹர்ஷல் பட்டேல்

கடந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வி பெற்றதற்கு முக்கியக் காரணம் பேட்டிங் வீரர்கள்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதாக ஆட்டத்தில் பங்களிப்பு கொடுக்க முடியவில்லை. அதனால் கடந்த போட்டியில் பந்து வீச்சாளராக இருந்த சிராஜ், சஹால் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய மூவரையுமே பந்து வீச்சாளராக இந்த போட்டியிலும் பயன்படுத்தலாம்.

அடுத்த போட்டிக்கான பெங்களூரு அணி – படிக்கல், கோலி, பட்டிதார், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், முகமது அசாருதீன், ஹசரங்கா, ஜெமிசன், சிராஜ், சஹால் மற்றும் ஹர்ஷல் பட்டேல்.