சிஎஸ்கேவுக்கு எதிரா ரெண்டு முறை ஜெயிச்ச சஞ்சு சாம்சன்தான் பெஸ்ட் கேப்டன் ; செம புத்திசாலி – புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன்சிங்!

0
213
Sanju samson

நேற்று ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்ட மிகவும் பரபரப்பான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று கேப்டன் சஞ்சு சாம்சன் தைரியமாக தனது ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்தார்.

- Advertisement -

பேட்டிங்கை தேர்ந்தெடுத்ததற்கு காரணமாக அவர் எங்களுடைய பலம் இரண்டாவது பந்து வீசுவது தான் அதையே நாங்கள் செய்வதாய் இருக்கிறோம் என்றும் கூறினார்.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடியில் 202 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

மேலும் டிரண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆடம் ஜாம்பா அணிக்குள் கொண்டுவரப்பட்டு மிகச் சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் கேப்டன்சி பற்றி பேசியுள்ள ஹர்பஜன் சிங் “ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கும் சஞ்சு சாம்சங்கின் கேப்டன்ஷியும் ராஜஸ்தான் அணியை மேலே கொண்டு சென்றது. சாம்சன் எல்லாப் பாராட்டுகளுக்கும் தகுதியானவர். சிஎஸ்கே மாதிரி வலுவான அணியை ஒரு சீசனில் இரண்டு போட்டிகளிலும் தோற்கடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் மிகச் சிறப்பான வியூகத்தின் மூலம் இரண்டு முறை சிஎஸ்கே அணியை சாம்சன் வீழ்த்தியிருக்கிறார்.

சஞ்சு சாம்சன் கேப்டனாக தற்பொழுது முதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஒரு நல்ல கேப்டனால்தான் மூன்று ஸ்பின்னர்களை அணியில் வைத்துக் கொண்டு அவர்களை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்!” என்று கூறியிருக்கிறார்!