இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்த அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் டெஸ்டில் 371 ரன்கள் என்ற இலக்கை நான்காவது இன்னிங்சில் வெற்றிகரமாக துரத்திய உத்வேகத்துடன் எங்கள் அணி உள்ளது. இந்த சூழலில் செய்தியாளரிடம் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களில் நான்கு நாட்கள் முழுவதும் மைதானத்தில் நாங்கள் பந்து வீசிக் கொண்டிருந்தோம்.”
“நிச்சயமாக உடல் சோர்வாக தான் இருந்தது. ஆனால் மூன்று நாட்கள் நல்ல ஓய்வில் இருந்தோம். தற்போது வீரர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றார்கள். எட்ஜ்பாஸ்டனில் இந்தியா வெற்றி பெற்றது கிடையாது. அந்த மைதானத்தில் விளையாடுவது எங்களுக்கு பிடிக்கும்.”
“நான்காவது இன்னிங்ஸில் பெரிய இலக்கை வெற்றிகரமாக துரத்தியதில் மகிழ்ச்சி. எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் திறமையான வீரர்களும் இருப்பதால் தான் சாதிக்க முடிந்தது. தனிப்பட்ட முறையில் நான் பந்து வீசி வருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோப்ரா ஆர்ச்சர் அணிக்கு திரும்பிருப்பது உண்மையிலேயே நல்ல விஷயம். அவர் நான்காண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டின் விளையாடி இருக்கிறார்.”
“எனினும் இந்த வாரம் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. ஒரு வாரம் எங்களுடன் அவர் பயணம் செய்தால் அது அவருக்கு மனதளவில் நன்றாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கின்றோம். இந்திய அணியின் பண்ட் மிகவும் அபாயகரமான வீரர். நான் எதிரணியில் இருந்தாலும் அவர் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது எனக்கு பிடிக்கும்.”
இதையும் படிங்க: WWE வீரராக மாற வாய்ப்பு கிடைத்தது.. அண்டர்டேக்கருடன் மோதி இருப்பேன்..இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஃபிளின்டாஃப் பேச்சு
“ஆனால் அதற்காக அவரை அப்படியே அடிக்கவிட்டோம் என்றால் அவர் எவ்வளவு பெரிய அபாயகரமான வீரராக மாறுவார் என்று கடந்த டெஸ்டில் பார்த்தோம். பும்ரா விளையாட வேண்டுமா இல்லை ஓய்வு எடுக்க வேண்டுமா என்பது குறித்து நான் பதில் சொல்லக்கூடாது. அது இந்திய அணியின் பிரச்சனை. முதல் டெஸ்ட் போல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற நாங்கள் கடுமையாக முயற்சி செய்வோம்” என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.