2022 ஐ.பி.எல் ஏலத்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதற்கு இதுதான் காரணம் – கவலையில் ரசிகர்கள்

0
411
Ben Stokes IPL

கிரிக்கெட் உலகில் நடந்துவரும் பிரீமியர் லீக் தொடர்களிலேயே மிகவும் செல்வாக்கான தொடர ஐபிஎல். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருக்கும் வீரர்கள் கூட ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளனர். அந்த அளவு விறுவிறுப்புக்கும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தொடர் ஐபிஎல்.

இதுவரை 8 அணிகள் கொண்ட தொடராக விளையாடப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் இந்த முறையில் இருந்து 10 அணிகள் கொண்ட தொடராக விளையாடப்பட உள்ளது. 2 புதிய அணிகளாக லக்னோ மற்றும் அகமதாபாத் விளையாடும் என்று ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதர 8 அணிகளும் அதிகபட்சம் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஏற்கனவே 8 அணிகளும் எந்த வீரர்களை தக்க வைத்துள்ளோம் என்று அறிவித்து விட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் ஏலத்தில் பங்கு கொள்ள வீரர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களது பெயரை பதிவிட்டு வருகின்றனர். பெயரை பதிவு செய்ய வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி கடைசி நாள் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2 புதிய அணிகள் பங்கேற்பதால் அதிக வீரர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் இந்த முறை என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஒருவர் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் அந்த அணியின் வீரர் சிறந்த ஆல்ரவுண்டர். கடந்த 2017 ஆம் ஆண்டு புனே அணிக்காக விளையாடி முதன்முதலில் ஐபிஎல் தொடரில் கால் பதித்தார். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார். அந்த ஆண்டு ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீரர் இவர்தான். ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சதங்கள் அடித்துள்ளார் ஸ்டோக்ஸ் இந்த முறை ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அவர்களது டெஸ்ட் அணியை மேம்படுத்துவதற்காக ஐ.பி.எல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளார். அதே போல் பென் ஸ்டோக்ஸ்ம் விலக்கிக்கொண்டு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆட இது உதவும் என்றெண்ணி ஒதிங்கியுள்ளார். பல கோடிகளுக்கு ஏலத்தில் செல்லும் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்காதது பல‍ கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது.

- Advertisement -