ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற இருந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக திகழும் பென் ஸ்டோக்ஸ் சமூக வலைதளத்தில் இந்த போட்டி குறித்த தனது சுவாரசியமான கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் விளையாடி வரும் நிலையில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 அணிக்கு கேப்டனாக இருக்கும் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக பில் சால்ட் கேப்டனாக இங்கிலாந்து அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 193 ரன்கள் ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு டார்கெட் நிர்ணயித்தும் அதனை வெற்றிகரமாக இங்கிலாந்து அணி சேஸ் செய்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் தொடரை நிர்ணயிக்கப் போகும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் கனமழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டு வெற்றி தோல்வி இன்றி இந்தத் தொடர் முடிவுற்றது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் தனது சமூக வலைதளத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் பெயர்களை குறிப்பிட்டு போட்டி நடைபெற இருந்த மைதானத்தின் புகைப்படத்தை பதிவிட்டு அதில் “லக்கி ஆஸ்திரேலியா ஐ கெஸ்” அதாவது மழையால் ஆஸ்திரேலியா அணி தப்பித்ததாகவும், இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு லக் அடித்துள்ளதாகவும் ஸ்டோக்ஸ் பதிவிட்டு இருக்கிறார்.
தற்போது அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல இங்கிலாந்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வி பெறும் நிலையில் இருந்த போது இதே போன்று பெய்த மழையால் போட்டி இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.
இதையும் படிங்க:கோலி ரோகித்தை பாகிஸ்தான் டீம்ல சேர்க்க போறிங்களா?.. இந்த விஷயத்துல மோசமான தப்பு நடக்குது – கம்ரன் அக்மல் குற்றச்சாட்டு
இதனால் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் மழை பெய்யாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்த நிலையில் அந்தப் போட்டியும் டிராவில் முடிய ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.