எங்க விக்கெட் கீப்பரே துருவ் ஜூரல் விளையாடறதை ரசிக்கிறாரு.. நான் என்ன பண்ண? – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
1889
Jurel

இங்கிலாந்துக்கு எதிராக தற்பொழுது நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்தத் தொடர் இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரிய கவலைகளை உருவாக்கி இருந்தது.

இந்திய அணியின் பல நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் விளையாட முடியாத சூழலில் இருந்தார்கள். இளம் வீரர்களை வைத்து இந்த தொடரை சமாளிக்க வேண்டிய நெருக்கடி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருந்தது.

- Advertisement -

மேலும் கிடைத்த சீனியர் வீரர்களில் கே எல் ராகுல் காயம் அடைந்து முதல் போட்டியோடு வெளியே சென்று விட்டார். முதல் போட்டியில் சிறப்பாக விளையாடியும் இந்திய அணி கடைசி ஒரு நாளில் செய்த தவறில் போட்டியை தோற்றது.

இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்திய அணி நிர்வாகத்தின் மீதும் பெரிய அழுத்தம் மற்றும் நெருக்கடி நிலவியது. இப்படியான சூழலில் வாய்ப்பு பெற்று இளம் வீரர்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்தியாவில் சமூக வலைத்தளத்தில் சர்ப்ராஸ் கான் பெயரை அதிகம் தேடியும் எழுதியும் வந்தார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவில் துருவ் ஜுரல் திடீரென மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக எதிர்காலத்தில் விளையாடக் கூடிய வீரராக தெரிய ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் துருவ் ஜுரல் பற்றி பேசும்பொழுது “அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகச் சிறப்பாக விளையாடினார். மேலும் அவரது விக்கெட் கீப்பிங்கும் கவனிக்க வேண்டிய ஒன்று. எங்கள் விக்கெட் கீப்பர் பென்ஃபோக்சையும் துருவ் ஜுரல் ஈர்த்துவிட்டார் என நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : திடீரென ஓய்வை அறிவித்த நியூசிலாந்து நட்சத்திர வீரர்.. கண்ணீர் மல்க பேட்டி.. அணியில் இடம் தந்தும் ஆச்சரிய முடிவு

துருவ் ஜுரல் பற்றி இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது “ஜுரல் இரண்டாவது டெஸ்டில் திடமாக அமைதியையும் நிதானத்தையும் வெளிப்படுத்தி விளையாடினார். அவர் எடுத்த 90 ரன்கள் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை இந்திய அணி நெருங்கி செல்வதற்கு பெரிய உதவியாக இருந்தது. மேலும் அவர் கில் உடன் இணைந்து இரண்டாவது இன்னிங்ஸில் அமைதியாகவும் முதிர்ச்சியாகவும் விளையாடினார்” என்று பாராட்டி இருக்கிறார்.