9 சிக்ஸ் 9 பவுண்டரி.. 155 ரன்கள் அடித்து போராடிய பென் ஸ்டோக்ஸ்… அபார பவுலிங்கால் ஆஸ்திரேலியா அணி பரபரப்பு வெற்றி!

0
2103

பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் அடித்தும் இங்கிலாந்து அணி 2 டெஸ்டில் தோல்வி. ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 416 ரன்களை அடித்து முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. ஸ்மித் சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நன்றாக துவங்கியிருந்தாலும் கடைசி கட்டத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் மட்டுமே முதல் இன்னிங்சில் அடித்தது. இதன் மூலம் 91 ரன்கள் பின்தங்கியது.

இரண்டாவது இன்னிங்சை முன்னிலையுடன் துவங்கிய ஆஸ்திரேலியா அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 91 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது.

சிக்கலான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 45 ரன்கள் மட்டுமே அடித்திருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது. அத்துடன் இப்போட்டியிலும் படுதோல்வியை சந்திக்கும் என பலரும் அதிருப்தி அடைந்தனர்.

- Advertisement -

அந்த சமயத்தில் பென் டக்கட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டுவந்தது. 83 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் பென் ஸ்டோக்ஸ். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ வெறும் 10 ரன்களுக்கு அவுட் ஆனார்.

ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் கிட்டத்தட்ட 180 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. கைவசம் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே வைத்திருந்தது. அப்போது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் அடித்திருந்தார். இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 70 ரன்கள் மட்டுமே தேவை என்று இருந்தபோது, தவறான ஷார்ட் விளையாடி தவறான நேரத்தில் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை எடுத்ததும் இங்கிலாந்து அணி நம்பிக்கை இழந்தது. ஆஸ்திரேலிய அணி நிம்மதி பெருமூச்சு விட்டது.

அடுத்து வந்த வீரர்களை விரைவாக வீழ்த்தி இங்கிலாந்து அணியை 327 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலிய அணி.