கேஎல் ராகுல் இனி ஐபிஎல்லில் ஆடுவாரா? மாட்டாரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு! – வெளிவந்த ரிப்போர்ட்!

0
1291

கேஎல் ராகுல் உடல்நிலை குறித்த பொறுப்பை பிசிசிஐ எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பது பற்றிய முடிவுகளையும் பிசிசிஐ எடுப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேஎல் ராகுல் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, போட்டியின் இரண்டாவது ஓவரில் பவுண்டரிக்கு சென்ற பந்தை துரத்தி சென்றபோது பலமாக காயம் ஏற்பட்டது.

- Advertisement -

தொடைப்பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டதால் அவரால் எழுந்து சரியாக நடக்க முடியவில்லை. அதன் பிறகு பீல்டிங்கிலும் ஈடுபடவில்லை. 9 விக்கெட்டுகள் போன பிறகு வேறு வழியின்றி பேட்டிங் செய்ய வந்தார். அப்போதும் ரன் ஓட முடியவில்லை

கேஎல் ராகுல் உடனடியாக ஸ்கேன் செய்யவும் அழைத்துச் செல்லப்பட்டார். அது குறித்து முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. இவரது உடல்நிலை இப்படி இருக்க, இனி கேஎல் ராகுல் உடல்நிலை கண்காணிக்கும் பொறுப்பை பிசிசிஐ ஏற்றுக் கொண்டு பார்த்துக் கொள்ளும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டிகளில் தொடர்வாரா? மாட்டாரா? என்பது குறித்து ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் சில கண்காணிபுகள் செய்தபின் பிசிசிஐ மற்றும் இந்திய தேசிய அகடமி முடிவுகள் எடுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

வருகிற ஜூன் 7ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் இருக்கிறார். சரியாக ஒரு மாத காலமே இருப்பதால் அதற்குள் கேஎல் ராகுலின் உடல்நிலை சரியாகிவிட வேண்டும் என்பதற்காக இந்த பொறுப்பு முழுவதையும் பிசிசிஐ எடுத்துக் கொள்வதாகவும், இனி அவரது உடல்நிலையை கண்காணித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

அனேகமாக இனி கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடர்வது சந்தேகம்தான் என்கிற கோணத்திலும் பார்க்கப்பட்டு வருகிறது. ஆகையால் லக்னோ அணிக்கு யார் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்பார் என்கிற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் இல்லாத போது ஃபீல்டிங்கை மற்றும் பந்துவீச்சாளர்களை க்ருனால் பாண்டியா பார்த்துக் கொண்டார். ஐபிஎல்-இல் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்டவராகவும் இருக்கிறார்.

ஆகையால் அவர்தான் அடுத்த கேப்டனாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. ரஞ்சிக்கோப்பை உட்பட உள்ளூர் போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேஎல் ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருக்க மாட்டார் என்கிற தகவல்கள் உறுதியாகியுள்ளது. அடுத்த அடுத்த போட்டிகளில் அவர் இருப்பாரா? மாட்டாரா? என்பதை பிசிசிஐ மற்றும் இந்திய தேசிய அகடமி முடிவு செய்யும் என கூறப்படுகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!