ஐபிஎல் 2023 முதல் வருகிறது புதிய ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி: இது எப்படி வேலை செய்கிறது? முழு விளக்கம்

0
209

2023 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ‘ஐபிஎல்’ தொடர் முதல்  ‘பிசிசிஐ’  ஒரு புதிய  யுக்தியை  அறிமுகம் செய்ய உள்ளது .  இதன்படி  ஒவ்வொரு அணியும்  மாற்று ஆட்டக்காரரை  ‘பேட்டிங்’ மற்றும் பந்துவீச்சு  இவற்றிலும் பயன்படுத்திக் கொள்ள இயலும் .இதனால் மாற்று ஆட்டக்காரர்களாக வருபவர்களும்  போட்டியின் அனைத்து துறைகளிலும்  தாக்கத்தை ஏற்படுத்தலாம் .

இந்த வெற்றியை நடைபெறவிருக்கும் ‘ஐபிஎல்’ தொடரில்  செயல்படுத்த போவதாக ‘பிசிசிஐ’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இதற்கு முன்பு இந்த யுக்தி  சமீபத்தில் நடந்து முடிந்த  செய்யது அலி முஸ்தாக்  உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில்  நடைமுறைப்படுத்தப்பட்டு  நல்ல வரவேற்பையும் நல்ல முடிவுகளையும் பெற்றது . இதன் காரணமாக பிசிசிஐ  இந்த நடைமுறைகளை  ஐபிஎல் தொடர்களிலும்  நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது .

- Advertisement -

இந்த புதிய விதிமுறைகளின் படி  ஒவ்வொரு அணியும்  தங்களது ஆடும் ‘லெவனை’ அறிவிக்கும் பொழுதே  நான்கு மாற்ற ஆட்டக்காரர்களையும் அறிவிக்க வேண்டும் . அந்த  மாற்று ஆட்டக்காரர்கள்  ஆட்டத்தின் 14 வது ஓவருக்கு முன்பாக  களம் இறக்கப் பட்டிருக்க வேண்டும் . இவர்கள் பேட்டிங்கிலும் ,பந்து வீச்சிலும்  முழுமையாக ஈடுபட முடியும் ,

இந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்ற ஆட்டக்காரர்கள் முறையில்  முன்பு போல் இல்லாமல்  அந்த வீரரால் பேட்டிங் மற்றும்  பவுலிங்  ஆகிய துறைகளில்  முழுமையாக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் . இந்த முறையில் ஒரு பந்துவீச்சாளருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மனையோ  இல்ல ஒரு பேட்ஸ்மனுக்கு பதிலாக பந்து வீச்சாளரையோ பயன்படுத்திக் கொள்ளலாம் . அவர்கள் இத்தனை பந்துகளை தான் ஆட வேண்டும் இல்லை  இத்தனை ஓவர்கள் தான் வீச வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லை .

ஆனால் இந்த மாற்று  ஆட்டக்காரர்  ஒரு ஓவர் நடந்து கொண்டிருக்கும் பொழுது  இவரை ஆட வைக்க முடியாது . அந்த ஓவர் முடிந்தபின்  இல்லையென்றால் அந்த ஓவரில் ஒரு விக்கெட் விழுந்தால் இவரை களம் இறக்கிக் கொள்ளலாம் .

- Advertisement -

மழையின் காரணமாகவோ, தட்பவெப்ப நிலை காரணமாகவோ  ஓவர்கள் குறித்து நடத்தப்படும் போட்டிகளில்  இந்த விதிமுறை  சில சிக்கல்களை ஏற்படுகிறது . மழையின் காரணமாக ஒரு ஆட்டம் 10  ஓவர்களாக குறைக்கப்பட்டால்  தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்று ஆட்டக்காரர்களை களம் இறக்க முடியாது . போட்டி 18  ஓவர்களை  கொண்டதாக குறைக்கப்பட்டால் மாற்று ஆட்டக்காரரை  13வது  ஓவர்  முடிவதற்கு முன்பாக பயன்படுத்த வேண்டும்.

முதலில் பேட்டிங் செய்த அணி   மாற்று ஆட்டக்காரரை  பயன்படுத்திய பின்பு    இரண்டாவது இன்னிங்ஸில்  மழைக்குறிக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால்  இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு  மாற்றாட்டக்காரரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு . இந்த முறையானது  ‘செய்யது அலி  முஸ்தாக்’  டி20 கிரிக்கெட் போட்டியில்  பரிசோதிக்கப்பட்டு  நல்ல முடிவுகளை கொடுத்துள்ளது . மேலும் இந்த முறையானது  ஆட்டத்தின் சுவாரசியத்தை கூட்டும் விதமாகவும் இருப்பதால்   ‘பிசிசிஐ ‘ 
யின் தொழில்நுட்ப  குழு  ஐபிஎல் போட்டிகளில்  இந்த முறையை  நடைமுறைப்படுத்த  ஒப்புதல் அளித்துள்ளது.