தம்பி 3வது டெஸ்டில் இடமில்லை.. போய் ரஞ்சி விளையாடுங்க.. உடனுக்குடன் பிசிசிஐ அதிரடி

0
810
BCCI

இந்திய வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடாமல் மேலும் காயம் இல்லாமல் இருக்கும் பொழுது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது தொடர்பாக பிசிசிஐ அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு துவக்க புள்ளியாக இஷான் கிஷான் ஓய்வில் வந்து ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் தனது அணியான ஜார்க்கண்ட் அணிக்கு விளையாட செல்லவில்லை.

- Advertisement -

இந்திய வீரர்கள் தங்களை இரண்டு மாத காலம் ஐபிஎல் தொடருக்கு தயார்படுத்துவதற்காக, அந்த காலகட்டத்தில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதை பழக்கமாக்கி வருகிறார்கள்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்தால், வரும் காலத்தில் அந்த வீரர்களின் திறமை பாதிக்கப்படும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி மிகப்பெரிய பின்னடைவுகளை சந்திக்க வேண்டியது வரும்.

எனவே இந்த விஷயத்தில் பிசிசிஐ உடனடியாக விழித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணியில் இல்லாமல் மேலும் காயம் இல்லாமல் இருக்கும் வீரர்கள் எல்லோரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஈடுபட வேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த விஷயத்தில் இன்னும் அதிரடி காட்டும் விதமாக, மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் முகேஷ் குமாரை, பிளேயிங் லெவனில் தேர்வு செய்யவில்லை. மேலும் ஆகாஷ் தீப் அணியில் இருக்கிறார்.

இதன் காரணமாக 16ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பீகார் அணிக்கு எதிராக பெங்கால் அணி ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. இதனால் முகேஷ் குமாரை பெங்கால் அணிக்கு ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐ உடனடியாக அனுப்பி வைத்திருக்கிறது.

இதையும் படிங்க : 8 இன்னிங்ஸ் சோகம்.. காப்பாற்றிய ரோகித் சர்மா.. அறிமுக வீரர்களுக்கு காத்திருக்கும் சோதனை

மீண்டும் பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பது கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.