ஐபிஎல் தொடர் மூலம் கிடைக்கும் வருவாயை நாங்கள் இப்படித் தான் செலவழிக்கிறோம் – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

0
71
Jay Shah about IPL Income

ஐபிஎல் தொடரை ஆரம்பித்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் ஊடக உரிமை சோனி நிறுவனம் கையில் இருந்தது. பின்னர் நடத்தப்பட்ட டெண்டரில் ஸ்டார் நிறுவனம் ஊடக உரிமையை 16,347.5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான ஊடக உரிமையை ஸ்டார் நிறுவனம் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியிருந்தது.

இந்த ஆண்டுடன் அந்த கால அட்டவணையை முடிவுக்கு வரும் நிலையில், 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான ஊடக உரிமையை எந்த நிறுவனம் கைப்பற்றப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் தற்போது எழுந்துள்ளது. இதற்கான டெண்டர் அடுத்த வாரம் பிசிசிஐ தரப்பில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அனைத்து பொது மக்களுக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாகவே இந்த டெண்டர் அடுத்த வாரம் பிசிசிஐ முன்னிலையில் நடைபெற போகிறது. நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஊடக உரிமை கடந்த முறை ஸ்டார் நிறுவனம் கைப்பற்றிய தொகையை காட்டிலும் 500-600 % மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடர் மூலம் கிடைக்கும் வருவாயை இப்படித்தான் பயன்படுத்துகிறோம்

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தற்பொழுது ஐபிஎல் தொடரின் மூலமாக கிடைக்கும் வருவாயை தாங்கள் எப்படி உபயோகப் படுத்துகிறோம் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

“எங்களைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும், கிரிக்கெட்டை வாழ்வாதாரமாகக் கொண்டு விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அது மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து பக்கமும் மைதானங்கள் நல்ல கட்டமைப்புடன் நல்ல வசதியுடன் இருக்க வேண்டும். அந்த மைதானங்களில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் எந்தவித சிரமமுமின்றி விளையாட வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்திற்கும் ஐபிஎல் தொடர் மூலமாக கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி வருவதாக ஜெய் ஷா கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இந்தியாவில் கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்ல அனைத்து வித நடவடிக்கைகளும் படிப்படியாக எடுத்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஆண்டு எந்தவித சிரமமுமின்றி ஐபிஎல் தொடர் நடைபெறும்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கையில் இடையில் ஒரு சில வீரர்களுக்கு எதிர்பாராதவிதமாக கொரானோ தொற்று ஏற்பட்டது. அதனால் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் சில மாதங்கள் கழித்து விளையாடப்பட்டது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு எந்த வித சிரமமும் இன்றி ஒரே மூச்சில் திட்டமிட்டபடி மிகவும் பாதுகாப்பாகன முறையில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்