அஸ்வின் இல்லை.. ஆல் டைம் இந்திய டெஸ்ட் பிளேயிங் லெவன்.. பாகிஸ்தான் பசித் அலி தேர்வு

0
123
Ashwin

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி இந்திய ஆல் டைம் கிரேட்டஸ்ட் டெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்குமான ஆல் டைம் இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கபில்தேவை அவர் தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி ஆல் டைம் கிரேட்டஸ்ட் இந்திய டெஸ்ட் பிளேயிங் லெவனுக்கு கபில் தேவை கேப்டனாக வைத்திருக்கிறார். அதே சமயத்தில் அசுரத்தனமான வேகப்பந்து வீச்சை வைத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அனுப்பி எதிராக மிகப்பெரிய அளவில் ரன்கள் குவித்த கவாஸ்கரையும் தன்னுடைய அணியில் வைத்திருக்கிறார்.

பசித் அலி தேர்ந்தெடுத்திருக்கும் இந்திய ஆல் டைம் கிரேட்டஸ்ட் டெஸ்ட் பிளேயிங் லெவனில் துவக்க வீரர் இடத்தில் கவாஸ்கர் தனி ஒருவராக இருக்கிறார். அடுத்து வீரேந்திர சேவாக் அல்லது ரோஹித் சர்மா இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என வைத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் மூன்றாவது இடத்திற்கு விராட் கோலி மற்றும் நான்காவது இடத்திற்கு சச்சின் டெண்டுல்கர் என இருவர் இடங்களுக்கும் மாற்று வீரர்கள் இல்லாமல் இவர்கள் இருவருமே இருக்கிறார்கள். ஐந்தாவது இடத்திற்கு முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் மற்றும் ராகுல் டிராவிட் என இருவரில் ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம் என வைத்திருக்கிறார்.

இதற்கு அடுத்து இந்த பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராகவும் துணை கேப்டன் ஆகவும் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். ஆல் ரவுண்டருக்கான ஏழாவது இடத்தில் கேப்டனாக கபில் தேவை தேர்வு செய்திருக்கிறார். இதற்கு அடுத்து இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களாக அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் இருக்கிறார்கள்.

மேலும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கான இடத்தில் பத்தாவது வீரராக ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். பதினோராவது இடத்தில் ஜாகிர் கான் மற்றும் ஜவகர் ஸ்ரீநாத் இருவரில் ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம் என வைத்திருக்கிறார்.

இதில் மிக முக்கியமாக இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை அவர் தேர்வு செய்யவில்லை. அதே சமயத்தில் அவர் ஹர்பஜன் சிங்கை அந்த இடத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : உண்மைதான்.. எங்க வீரர்கள் இதுக்கு தகுதி இல்லாம இருக்காங்க – பாக் துணை கேப்டன் சவுத் ஷகீல் ஒப்புதல்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி தேர்ந்தெடுத்த இந்திய ஆல் டைம் டெஸ்ட் பிளேயிங் லெவன் :

சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக்/ரோஹித் சர்மா, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன்/ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி (து.கே), கபில்தேவ் (கே), அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கான்/ ஜவகல் ஸ்ரீநாத்.

- Advertisement -