பிசிசிஐ கடந்த ஆண்டில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கான சம்பளத் தொகையை அதிகரித்து அறிவித்திருந்தது. மேலும் ஆண்களுக்கு இணையான சம்பளத்தை பெண்கள் கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகளுக்கும் அறிவித்திருந்தது. இந்த வகையில் உள்நாட்டில் கிரிக்கெட்டை வளர்க்கும் எல்லா வேலைகளையும் பிசிசிஐ சிறப்பாக செய்து வருகிறது.
பிசிசிஐ காட்டிய தாராளம்
கடந்த ஆண்டில் ரஞ்சி டிராபி வெல்லும் அணிக்கு பரிசு தொகை 5 கோடி, இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 3 கோடி, அரையிறுதியில் வெளியேறும் அணிக்கு தலா 1 கோடி என பிசிசிஐ அறிவித்திருந்தது.
இதேபோல உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களான துலீப் டிராபி, இரானி கோப்பை, விஜய் ஹசாரே டிராபி, சையத் முஸ்டாக் அலி டிராபி மற்றும் தியோதர் டிராபிக்கான பரிசுத்தொகைகளையும் பரிசுத்தொகைகளையும் அதிகரித்து அறிவித்திருந்தது.மேலும் பெண்கள் கிரிக்கெட் தொடர்களின் பரிசுத்தொகையையும் அதிகரிக்க உறுதியளித்திருந்தது
ஜெய் ஷா புதிய அறிவிப்பு
இப்படியான நிலையில் அனைத்து மகளிர் மற்றும் ஜூனியர் லெவல் தொடர்களுக்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்படும், மேலும் இப்படியான தொடர்களில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுக்கான பரிசுத் தொகையும் வழங்கப்படும், அத்தோடு விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்டாக் அலி டிராபி போன்ற தொடர்களில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்படும் என ஜெய் ஷா அறிவித்திருக்கிறார்.
இது குறித்து ஜெய் ஷா கூறும் பொழுது “எங்கள் உள்நாட்டு கிரிக்கெட் திட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் மற்றும் ஜூனியர் லெவல் தொடர்களுக்கான பரிசுத்தொகையையும், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளுக்கான பரிசு தொகையையும் அறிமுகப்படுத்துகிறோம்.
இதையும் படிங்க : ஷிகர் தவான் ஓய்வுக்கு காரணம் இதுதான்.. இனி இன்னும் நிலைமை மோசமா இருக்கும் – சுனில் கவாஸ்கர் கருத்து
இந்த முயற்சியானது உள்நாட்டு கிரிக்கெட் சுற்றுகளில் சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்க கொடுக்கப்படும் வெகுமதி ஆகும். இந்த முயற்சியில் அசைக்க முடியாத ஆதரவை கொடுத்த அபெக்ஸ் குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக வெகுமதி அளிக்கும் சூழலை உருவாக்கி வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.