இந்திய டி20 அணியை அமைப்பதில் கம்பீர் மற்றும் அகர்கர் திட்டத்திற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய டி20 அணியை தேர்வு செய்வதில் தேர்வுகுழு தலைவர் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இருவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருக்கிறது என்றும், ஆனால் பிசிசிஐ வேறு திட்டங்களை வைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் டெஸ்ட் அணியின் கேப்டன் கில் மீது கம்பீர் மற்றும் அகர்கர் இருவரும் பெரிய நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அடுத்து விராட் கோலி இடத்தில் அவரை வைத்து மதிப்பதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக அவரை மூன்று வடிவ கிரிக்கெட் இந்திய அணிக்குள்ளும் கொண்டு வந்து, மேலும் அவரைக் கேப்டன் ஆகும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. தற்போது பிசிசிஐ இதற்கு முழுமையாக மறுப்பு தெரிவித்து அவர்களது திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசும்பொழுது “கில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அனைத்து தேர்வாளர்களும் கம்பீரும் அவருடைய பெரிய ரசிகர்கள். மேலும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் விராட் கோலியை போல கில் பெரிய மதிப்பு பெற்ற வீரராக இருக்கிறார். ஆனாலும் அவரை பிசிசிஐ டி20 கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக நினைக்கவில்லை. மேலும் தற்போது தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலும் மாறியதற்கு இவங்க 2 பேர் தான் காரணம்.. சூர்யகுமார் யாதவ் கருத்து
“அடுத்து திலக் வர்மா மூன்றாவது இடத்திலும் கேப்டன் சூரியகுமார் நான்காவது இடத்திலும் வருகிறார்கள். மேலும் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் முதல் இரண்டு இடங்களில் தொடர்கிறார்கள். எனவே இவர்களை நீக்கிவிட்டு கில்லை கொண்டுவர முடியாது” என்று கூறி இருக்கிறார்.