இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாடி முடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக செப்டம்பர் மாதத்தில் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இது டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு நடத்தப்படும் டி20 தொடராகும்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இரண்டு பெரிய சீனியர் வீரர்கள் டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் டெஸ்ட் ஃபார்மேட்டிலும் ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து அவர்கள் ஒரு நாள் தொடரில் மட்டும் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் 2027ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பைக்கு முன்பாக அக்டோபர் மாதத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வெளிநாட்டில் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் விராட் மற்றும் ரோஹித் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவிக்கப் போகிறார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், அது குறித்த உண்மை தகவலை பிசிசியை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறும் போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் மனதில் ஏதேனும் விஷயம் இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர்கள் செய்ததைப் போலவே செய்வார்கள். ஆனால் இந்திய அணியின் பார்வையில் அடுத்ததாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான முந்தைய பணிகளை தயாரிப்பதாகும். அனைத்து வீரர்களும் சிறந்த உடல் தகுதியில் இருக்கும் வகையில் ஆசியக் கோப்பைக்கு வலிமையான இந்திய அணியை அனுப்பும்.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட்டே கில்லுக்காகவா?.. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது.. புதிய செய்தியால் இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு
அவர்கள் இருவரும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடினாலும் அதற்கு முன்பு ஆறு ஒரு நாள் போட்டிகளில் அவர்கள் விளையாடுவார்கள். ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டிகளுக்கும் தென்னாப்பிரிக்க ஒரு நாள் போட்டிகளுக்கும் இடையில் இந்தியா ஏ தொடர் உள்ளது” என்று பிசிசிஐ நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது. மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் எதிர்காலம் குறித்தும் மற்றும் அவர்களின் ரசிகர்களின் கருத்துக்களை வைத்தும் மதிப்பீடு செய்வார்கள் என்று தெரிகிறது.