இந்திய அணியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் முன்னாள் நடுவர்களுக்கும் பிசிசிஐ மாதம் வாரியாக பென்ஷன் தொகை கொடுக்கும் என்பது நமக்கு தெரியும். தற்பொழுது அந்த பென்ஷன் தொகையை அதிகரித்து பிசிசிஐ புதிய வரைமுறையை கொண்டுவந்துள்ளது. புதியவரை முறையில் இதற்கு முன் ஒதுங்கியிருந்த பென்ஷன் தொகையை விட அதிக அளவு இனி அவர்களுக்கு கிடைக்கப் போகிறது.
பென்ஷன் தொகையை உயர்த்திய பிசிசிஐ
2003-04 சீசன் வரையில் விளையாடிய பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் வீரர்களுக்கு (குறைந்த பட்சம் 25 முதல் 49 போட்டிகள் விளையாடு இருக்கும் வீரர்ர்கள்) இதற்கு முன் மாத பென்ஷன் 15 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இனி அவர்களுக்கு மாத பென்ஷன் தொகை 30 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 50 முதல் 74 போட்டிகள் வரை விளையாடிய வீரர்களுக்கு இதுவரை மாத பென்ஷன் தொகை 22,500. ஆனால் இனி அவர்களுக்கு கிடைக்கப்போகும் மாத பென்ஷன் தொகை 45,000 ஆகும்.
அதேபோல 70 போட்டிகளுக்கு மேல் விளையாடி வீரர்களுக்கு இதுவரை இருந்த மாத பென்ஷன் தொகை 30,000. இனி அவர்களுக்கு கிடைக்கப்போகும் மாத பென்ஷன் தொகை 52,500.
2015ம் ஆண்டு பிசிசிஐ ஒரு வரைமுறையை கொண்டு வந்தது. 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வீரர்களுக்கு (இருபத்தி ஐந்து போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கும் வீரர்கள்) மாத பென்ஷன் தொகை 50 ஆயிரம் என்பது. ஆனால் இனி அவர்களுக்கு கிடைக்கப்போகும் மாத பென்ஷன் தொகை 70 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கும் மாத பென்ஷன் தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இது சம்பந்தமாக பேசி இருக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி நடுவர்கள் ஆற்றிய பணியும் மிக மிக முக்கியமானது. அவர்களுடைய மாத பென்ஷன் தொகையும் நாங்கள் உயர்த்தி இருக்கிறோம். மொத்தம் சுமார் 900 பணியாளர்கள் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள், 75% க்கும் அதிகமான பயனாளிகள் 100% உயர்வு பெறுவார்கள், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2019 முதல் பென்ஷன் தொகை உயர்வு சம்பந்தமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கோரிக்கை எடுத்துவைத்து நிலையில் அது தற்போது நிறைவேறியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் பிரதிநிதியும் முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஜெய் ஷாவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.