38க்கு 38.. விராட்ட பார்த்து ரிஷப் பண்ட் இத கத்துக்கணும்.. இல்லனா எதிர் டீம்ஸ் முடிச்சிருவாங்க – வாசிம் ஜாபர் அறிவுரை

0
224
Pant

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் பாட்டில் ஒரு முக்கியமான விஷயத்தை விராட் கோலியிடமிருந்து கற்றுக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் சிக்கலாகிவிடும் என வாசிம் ஜாஃபர் கூறி இருக்கிறார்.

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடி 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். ஆனால் அவருடைய பேட்டிங் சரளமாக இல்லை. அவர் பேட்டிங் செய்யும்பொழுது மிகுந்த தடுமாற்றத்துடன் காணப்பட்டார். மேலும் அவர் எப்பொழுதும் அவுட் ஆவதற்கான வாய்ப்பு இருந்தார்.

- Advertisement -

48 சதவீத டாட் பந்துகள்

நடப்பு ஐபிஎல் தொடரில் 50 பந்துகளுக்கு மேல் சந்தித்தவர்கள் பட்டியலில் மிக அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 48 சதவீத டாட் பந்துகள் விளையாடி இருக்கிறார். அவரால் பந்தை சிங்களுக்கு தட்டி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விளையாட முடிவதில்லை. இதன் காரணமாக அவர் கிரீசில் வசமாக மாட்டிக் கொள்கிறார்.

மேலும் அவருடைய ஷாட் தேர்வு லெக் சைடு மட்டுமே பெரும்பாலும் இருக்கிறது. அவர் பந்தை நேராக அடிக்க எந்த முயற்சியும் எடுப்பது கிடையாது. இதன் காரணமாக எதிரணிகள் அவருக்கு எந்த பக்கத்தில் பந்தை வைத்தால் அவரால் விளையாட முடியாது என்று சரியாக திட்டமிட்டு வந்து அவரை சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்கள். இது லக்னோ அணிக்கு பேட்டிங்கில் சிக்கலை உண்டாக்கி வருகிறது.

- Advertisement -

விராட்டை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்

இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசும்பொழுது “ரிஷப் பண்ட் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய முயற்சி செய்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டால் விராட் கோலி இதில் ஒரு மாஸ்டர். அவர் மைதானத்தில் எல்லா பக்கங்களிலும் விளையாடி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வார். ஆனால் ரிஷப் பண்ட் இப்படி செய்யாமல் சிக்கிக் கொள்கிறார். இதன் காரணமாக அவர் பெரிய ஷாட்டுக்கு செல்கிறார். அவர் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய பழக வேண்டும்”

இதையும் படிங்க : பாண்டிங் உங்க ஆள்னு பார்க்காதிங்க.. இந்த ஒரு காரணத்துக்காகவே மேக்ஸ்வெல்ல தூக்கிடுங்க – சைமன் டால் கருத்து

“ரிஷப் பண்ட் பேட்டிங்கை நாம் பார்க்கும் பொழுது அவர் எப்பொழுதும் லெக் சைடு விளையாட நினைக்கிறார். ஸ்கொயர் லெக், மிட் விக்கெட் மற்றும் கவ் கார்னர் திசைகளில் அடிக்கவே பார்க்கிறார். அவர் பந்தை நேராக அடிக்க முயற்சி செய்வதே கிடையாது. இதனால் எதிரணிகள் அவருக்கான திட்டத்தை மிக எளிதாக உருவாக்கி விடுகிறார்கள். எனவே அவர் மைதானம் முழுவதிலும் பந்தை விளையாடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -