இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடத்த முடியாமல் போனால் இந்த 2 நாடுகளில் நடத்தப்படும் – பிசிசிஐ நம்பிக்கை

0
252
IPL 2022

2008ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்தியது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு தேர்தல் சூழ்நிலை காரணமாக ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. பின்னர் 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் கொரனோ சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்த உடன் பிசிசிஐ நிச்சயமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் பழைய படி இந்தியாவில் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தாண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால் பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் தொடர் நடத்துவது உறுதி என்றும், ஒருவேளை இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறாமல் போனால் தென்னாப்பிரிக்கா அல்லது இலங்கையில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அல்லது இலங்கையில் நடைபெற போகும் ஐபிஎல் தொடர்

மேற்கூறியபடி இந்தியாவில் வருகிற மார்ச் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு இந்தியா வரும் வேளையில், ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி இந்தியாவிலேயே நடைபெறும். ஆனால் ஐபிஎல் தொடரில் நடக்க இருக்கும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறையாத பட்சத்தில், ஐபிஎல் தொடரை தென் ஆப்பிரிக்கா அல்லது இலங்கையில் வைத்து நடத்துவது குறித்து பிசிசிஐ தற்பொழுது ஆலோசனை செய்து வருகிறது.

2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்றது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்க ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, இந்த இரண்டு நாடுகளிலும் கிரிக்கெட் மைதானங்கள் நிறைய இருக்கின்றன. அதேசமயம் இந்த இரண்டு நாடுகளில் தொற்று எண்ணிக்கை இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கையில் குறைவாகவே இருக்கிறது. எனவே இந்த இரண்டு நாட்டில் இறுதி நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் அல்லது இலங்கையில் வைத்து ஐபிஎல் தொடர் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று பிசிசிஐ தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் நடந்த அந்நிர்வாகம் வரவேற்றுள்ளது.