ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் முக்கியமான பயிற்சி போட்டியை பிசிசிஐ ரத்து செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அணி இந்த மாதம் 22ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை பெர்த் மைதானத்தில் விளையாட இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்திருப்பதால் தற்பொழுது திட்டங்கள் மாற்றப்படுகிறது.
இந்திய ஏ அணி சுற்றுப்பயணம்
இந்திய அணி ஆஸ்திரேலிய செல்வதற்கு முன்பாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலியா சென்று தற்பொழுது நான்கு நாள் பயிற்சி போட்டியில் ருதுராஜ் தலைமையில்விளையாடி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஐந்தாம் தேதி டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் உடனடியாக இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா செல்கிறது.
இந்திய ஏ அணி பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக விளையாடுவது போல இந்திய அணிக்கு பயிற்சி போட்டிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் இந்திய ஏ அணிக்கு எதிராகவே இந்திய அணி விளையாடுவதற்கான பயிற்சி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பயிற்சிப்போட்டி நவம்பர் 15 முதல் நவம்பர் 17ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்தது.
ரத்து செய்த பிசிசிஐ
தற்பொழுது இந்திய ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாலில் இந்திய அணி விளையாட இருந்த மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்திருக்கிறது. இந்திய அணிக்கு முதல் போட்டிக்கு முன்பாக பயிற்சி கிடைப்பதற்கான வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது.
அதே சமயத்தில் முதல் போட்டி நடைபெறும் பெர்த் மைதானத்தின் சூழ்நிலைக்கு நல்ல முறையில் பழகுவதற்காக மூன்று நாட்களை பயிற்சிக்காக எடுத்துக் கொள்வதாகவும், மேலும் மைதானத்தை பழகுவதற்காக நடு ஆடுகளத்தில் இருந்து நேரம் செலவிடப் போவதாகவும் பிசிசிஐ தரப்பில் காரணம் கூறப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க : வெறும் 25 ஓவர்.. எவின் லீவிஸ் அதிரடி.. இங்கிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் வென்றது.. முதல் ODI போட்டி
இருந்தபோதிலும் இந்திய அணி ஏதாவது ஒரு பயிற்சி போட்டியில் விளையாடுவது நல்லதாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள். நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால் பயிற்சி போட்டியை விட அதிக பயிற்சி தேவை என பிசிசிஐ நினைக்கிறது!






