டி.ஆர்.எஸ் மற்றும் சூப்பர் ஓவரில் புதிய மாற்றங்கள் – 2022 ஐபிஎலில் பிசிசிஐ கொண்டுவந்துள்ள புதிய சில விதிமுறைகள்

0
1895
New IPL Rules 2022

இன்னும் சில நாட்களில் அதாவது வருகிற மார்ச் 26ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் இந்தியாவில் நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற போவதால் ரசிகர்கள் அனைவரும் தற்பொழுது ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வருகிற மார்ச் 26ம் தேதி அன்று முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் சம்பந்தமாக முக்கிய விதிமுறைகளை அறிவித்துள்ள பிசிசிஐ

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் ஒரு சில விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்சில் ஒரு அணிக்கு ஒரு ரிவ்யூ மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஒரு இன்னிங்சில் 2 ரிவ்யூ கொடுக்கப்படும் என்று பிசிசிஐ தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் எம் சி சி தரப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற புதிய விதிமுறையின்படி ஒரு ஓவரில் இறுதி பந்தை தவிர்த்து மீதமுள்ள 5 பந்துகளில் ஏதேனும் ஒரு பந்தில் ஒரு வீரர் கேட்ச் மூலம் அவுட் ஆகும் வேளையில், எதிர்முனையில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் வீரர் ஸ்ட்ரைக்கை தக்க வைக்க ஓடி வந்தாலும் எந்தவித பயனும் இல்லை. அவுட்டான பேட்ஸ்மேன் இடத்தில் புதிய பேட்ஸ்மேன் வந்தது தான் விளையாட வேண்டும்.

சூப்பர் ஓவர் குறித்த புதிய விதிமுறை

சூப்பர் ஓவர் சம்பந்தமாக முக்கிய விதி முறை ஒன்று பிசிசிஐ தரப்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் ஒரே ஸ்கோர் குவித்து சமனில் முடித்துக் கொண்டால், சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்ற அணியை முன்பு போலவே தீர்மானிக்கலாம்.

- Advertisement -

ஒருவேளை சூழ்நிலை மற்றும் தவிர்க்க முடியாத காரணத்தினால் சூப்பர் ஓவர் நடத்த முடியாமல் போனால், அந்த இரு அணிகளில் லீக் தொடரின் தரவரிசையில் எந்த அணி முன்னணியில் உள்ளதோ அந்த அணியே வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும். குறிப்பாக இந்த விதிமுறை இறுதிப் போட்டியிலும் பின்பற்றப்படும் என்று பிசிசிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது.

அதேபோல ஒரு போட்டியில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக ஒரு அணி பதினோரு வீரர்களை கொண்ட ஃபீல்ட் அமைப்பை செட் செய்ய முடியவில்லை என்றால் (குறிப்பாக ஏழு இந்திய வீரர்கள் இருந்தாக வேண்டும்) அந்த போட்டியை அந்த அணியின் நிழல் இல்லாத நிலைமை புரிந்து தள்ளிவைக்க முடியாது என்றும், அந்த அணியே தோல்வி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தற்பொழுது தெரிவித்துள்ளது.

மேலும் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி எந்த மைதானத்தில் வேண்டுமானாலும் நடைபெறலாம் என்றும், இறுதியில் நாக் அவுட் போட்டிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பிசிசிஐக்கு முழுவதுமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.