இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் பங்களாதேஷ் இங்கிலாந்து தொடர்.. புது அட்டவணை அறிவிப்பு.. பிசிசிஐ விளக்கம்

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முடித்த பிறகு இந்திய அணிக்கு அதற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இந்தியா மோத உள்ள சில போட்டிகளில் சில மாற்றங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன.

சுமார் 40 நாட்கள் ஓய்விற்குப் பிறகு இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதலில் களமிறங்க உள்ளது. டெஸ்ட் தொடருக்குப் பிறகு டி20 தொடரில் வங்கதேச அணியோடு இந்தியா மோதுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இந்தியா மோதும் சில போட்டிகளின் அட்டவணைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தரம்சாலாவில் நடைபெற இருந்த நிலையில் அந்தப் போட்டி தற்போது குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனென்றால் ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள ட்ரெஸ்ஸிங் ரூம்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் முதல் போட்டி குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது. குவாலியரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமந்த் மாதவராவ் சிந்தியா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.
அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளின் மைதானங்களை மாற்றியுள்ளது.

முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற இருந்த நிலையில் அந்தப் போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற இருந்த இரண்டாவது போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் முதல் போட்டி நடைபெறும் போது கொல்கத்தா காவல்துறை சுதந்திர தின பணிகளை மேற்கொள்ள வேண்டி வருவதால் இதனை கருத்தில் கொண்டு போட்டி மாற்றப்பட்டுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் 19 மற்றும் 27ம் தேதிகளில் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க:டெல்லி பிரீமியர் லீக்.. நட்சத்திர இந்திய வீரர்கள் மோதும் மினி ஐபிஎல்.. எப்போது எந்த சேனல்.. முழு விபரம்

அதற்குப் பிறகு மூன்று டி20 போட்டிகள் அக்டோபர் 6, 9 மற்றும் 12ம் தேதிகளில் குவாலியர், டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் நடைபெற இருக்கிறது. அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22, 25, 28, 31 மற்றும் பிப்ரவரி 2ம் தேதிகளில் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே மற்றும் மும்பை நகரங்களிலும் அதற்குப் பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகள் 6, 9 மற்றும் 12ஆம் தேதிகளில் நாக்பூர், கடாக் மற்றும் அகமதாபாத் நகரங்களில் நடைபெற உள்ளது.

- Advertisement -
Published by