ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு முன்பாக முத்தரப்பு டி20 தொடரில் பங்களாதேஷ் விளையாடும் – ஜலால் யூனுஸ் உறுதி

0
137

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயல்பாடுகளின் தலைவர் ஜலால் யூனுஸ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நியூசிலாந்தில், பங்களாதேஷ் அணி முத்தரப்பு டி20 தொடரில் விளையாடப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்களாதேஷ் அணியை விளையாடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடக்கம் முன்னர் பங்களாதேஷ் அணி முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயல்பாடுகளின் தலைவர் ஜலால் யூனுஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பங்களாதேஷ் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர்

இது சம்பந்தமாக பேசிய தலைவர் ஜலால் யூனுஸ், “ஐசிசி உலக கோப்பை டி20 தொடக்கம் முன்னர் மொத்தமாக 16 க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் பங்களாதேஷ் அணி விளையாடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பங்களாதேஷ் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

அங்கே பங்களாதேஷ் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நடைபெற இருக்கின்றது என்றும் உறுதிப்படுத்தியிருக்கிறார். நியூசிலாந்துக்கு செல்வதற்கு முன்னர் ஆஸ்திரியாவில் ஒரு வாரம் முகாமிற்கு பின்னர் நியூஸிலாந்துக்கு சென்று டி20 தொடரில் விளையாட போவதாகவும் தலைவர் ஜலால் யூனிஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

கூடிய விரைவில் அவர் திரும்புவார் என்ற நம்பிக்கை உண்டு

பங்களாதேஷ் அணியின் சீனியர் பேட்ஸ்மேன் தமிம் இக்பால் ஆறு மாதகாலத்திற்கு டி20 போட்டிகளில் பங்கெடுத்து விளையாட போவதில்லை என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தார். அது சம்பந்தமாக பேசியுள்ள ஜலால் யூனிஸ், “அவருடைய முடிவுக்கு நாங்கள் நாங்கள் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப் போவதில்லை, அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். கூடிய விரைவில் டி20 போட்டிகளில் அவர் விளையாட வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை. அவருடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கூடிய விரைவில் அவர் டி20 போட்டிகளில் முன்புபோல விளையாடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.