ஸ்டெயின் இல்ல.. 3 வடிவ கிரிக்கெட்டில்.. இந்த 4 பவுலர்கள ஆட கஷ்டப்பட்டேன் – விராட் கோலி கருத்து

0
151
Virat

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 3 வடிவ கிரிக்கெட்டிலும் தான் விளையாட மிகவும் கடினப்பட்ட பந்துவீச்சாளர்கள் யார்? என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் ஒரே நேரத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய, விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக இன்றைய தேதிக்கு விராட் கோலி மட்டுமே இருக்கிறார். வடிவத்திற்கு வடிவம் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய திறமை உலகக் கிரிக்கெட்டில் விராட் கோலி தாண்டி வேறு யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உலகின் அரிய பேட்ஸ்மேன்

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருந்த ஒரே பேட்ஸ்மேனாக விராட் கோலி இருக்கிறார். இன்றைய கிரிக்கெட் உலகில் வடிவத்திற்கு வடிவம் அதற்கு ஏற்றார் போல மாறிக் கொள்வதுதான் மிகவும் சவாலானதாக இருக்கிறது. இந்த விஷயத்தை மிகவும் எளிதாக செய்யக்கூடிய வீரராக விராட் கோலி பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரை வென்றதுடன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அதே சமயத்தில் டி20 தொடரில் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். மேலும் விராட் கோலியிடம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பேட்டிங் செய்வதற்கு கடினமான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி நான்கு பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து பதிலளித்திருக்கிறார்.

- Advertisement -

இவர்கள் நால்வரையும் ஆட சிரமப்பட்டேன்

முதலில் விராட் கோலி இடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கடினமான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு விராட் கோலி உலகின் தலைசிறந்த டேல் ஸ்டெய்னை கூறவில்லை. அவர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை தேர்வு செய்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் விராட் கோலிக்கு 710 பந்துகள் வீசி அதில் 7 முறை ஆட்டம் இழக்க வைத்திருக்கிறார். இதில் 305 ரன்கள் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025..சிஎஸ்கே அணியின் ஸ்கவுட்டிங் மோசமாக இருக்கிறது.. கவாஸ்கர் விமர்சனம்

மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் இருவரையும் தான் விளையாட சிரமப்பட்டதாகவும், இதே போல டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் மிஸ்டரி ஸ்பின்னர் சுனில் நரைனை விளையாட சிரமப்பட்டதாகவும் விராட் கோலி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -