பாபர் பயிற்சியில ரன் அடிப்பாரு.. அந்த 2 பேர் பையை கட்டி வீட்டுக்கு அனுப்புங்க – பாக் பசித் அலி பேச்சு

0
129
Basit

நேற்று பாகிஸ்தான் அணி தங்களது சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பொறுப்பில்லாமல் விளையாடினார்கள் என்றால் பந்துவீச்சாளர்கள் அதற்கு மேல் செயல்பட்டு இருந்தார்கள். ஒட்டு மொத்தமாக மூன்று துறைகளிலும் பங்களாதேஷ் அணியிடம் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

தவறான அணித் தேர்வு

பாகிஸ்தான் உள்நாட்டில் 28 வருடங்களுக்குப் பிறகு பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் 4 வேகப் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது. ஆனால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து ஐந்தாவது நாளில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் பசித் அலி இது குறித்து பேசும்பொழுது ” அப்துல்லா ஷபிக் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடந்த காலங்களில் எடுத்த ரன்களின் காரணமாக அவர் தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார். நான் பாகிஸ்தான் டிரஸ்ஸிங் ரூமில் இருந்திருந்தால் பேக்கை கட்டிக் கொண்டு அப்துல்லா ஷபிக்கை வீட்டுக்கு போகச் சொல்லி இருப்பேன்.

- Advertisement -

ஷாகின் அப்ரிடிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அவரை அணியில் இருந்து அனுப்பி முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டும். முதலில் அவர் தந்தையான அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரை தன் மகனுடன் நேரம் செலவு செய்ய அனுப்பி வையுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

வலைப் பயிற்சியில் மட்டும் ரன் அடிக்கும் பாபர் அசாம்

மேற்கொண்டு பாபர் அசாம் பேட்டிங் பற்றி பசித் அலி மிகவும் நகைச்சுவையாக அதே நேரத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். பாபர் அசாம் வலைப் பயிற்சியில் மட்டுமே நேரம் செலவிட்டு ரன்கள் எடுத்து விடுவதாகவும், போட்டியில் ரன் எடுப்பதில்லை எனவும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : பிசிசிஐயில் ஜெய் ஷா இடத்திற்கு யார்?.. டெல்லியில் இருந்து வரப்போகும் பிரபலம் – வெளியான புதிய தகவல்கள்

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “பாபர் நீங்கள் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் எடுக்க வேண்டிய மொத்த ரன்களையும் வலைப் பயிற்சியிலேயே எடுத்து விடுகிறீர்கள். நீங்கள் வலையில் இரண்டு மணி நேரம் பேட்டிங் செய்கிறீர்கள். ஆனால் விளையாட வரும் பொழுது அப்படி எதையும் செய்வதில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -