பிசிசிஐயில் ஜெய் ஷா இடத்திற்கு யார்?.. டெல்லியில் இருந்து வரப்போகும் பிரபலம் – வெளியான புதிய தகவல்கள்

0
66
BCCI

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக ஜெய் ஷா இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தேர்வாகும் பொழுது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக யார் வருவார்கள்? என்ற கேள்வி இருந்து வருகிறது.

உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருந்து. ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிக உச்சத்திற்கு கொண்டு வைத்திருக்கிறது. இதன் வருமானம் யாரும் நெருங்க முடியாத அளவில் இருக்கின்ற காரணத்தினால், இந்திய கிரிக்கெட்டின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் உலகக் கிரிக்கெட்டில் தாக்கத்தை செலுத்துகிறது .

- Advertisement -

ஜெய் ஷா காலத்தில் ஐபிஎல் வளர்ச்சி

ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக வந்த காலகட்டத்தில் இருந்து ஐபிஎல் தொடர் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி இருக்கிறது என்று கூறலாம். தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் மிகப்பெரிய தொகைக்குப் போய் இருக்கிறது. ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கு கிட்டத்தட்ட 110 கோடி ரூபாய் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருமானமாக கிடைக்கிறது.

இந்த நிலையில் ஜெய் ஷா ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். மேலும் பழைய தலைவர் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். ஐசிசி அமைப்பில் இருக்கும் 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்களின் ஆதரவு ஜெய் ஷாவுக்கு இருக்கிறது. இவர் ஏற்கனவே ஐசிசி நிதி சம்பந்தப்பட்ட குழுவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவதும்உறுதியானது.

- Advertisement -

ரோகன் ஜெய்ட்லி

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் பொறுப்பில் உயர் பதவியில் இருக்கும் ரோகன் ஜெய்ட்லி அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பதவிக்கு வருவார் என்று செய்திகள் பதவிக்கு வருவார் என்று செய்திகள் கூறுகிறது. இவர் மறைந்த அருண் ஜெய்ட்லியின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட் என்ன நடக்குது.. நான் பிஎஸ்எல் ஆடும் போது மேஜிக் மாதிரி இருந்துச்சு – கெவின் பீட்டர்சன் பேட்டி

டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெய்ட்லி பெயரே வைக்கப்பட்டு இருக்கிறது. இவர் ஏற்கனவே கிரிக்கெட்டோடு மிகவும் சம்பந்தப்பட்டிருப்பவர். அத்தோடு அரசியல் ரீதியாகவும் இவர்கள் ஒரே கட்சியில் இயங்க கூடியவர்கள். இதன் காரணத்தால் இவருக்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் உறுதியாகவே தெரிவிக்கின்றன.

- Advertisement -