இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி டிராஃபியில் பரோடா மற்றும் தமிழக அணி விளையாடிய போட்டியில் பரோடா அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் பரோடா அணியின் ஹர்திக் பாண்டியா தற்போது சென்னை அணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பந்துவீச்சாளர் ஒருவரின் ஒரே ஓவரில் 29 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சையது முஸ்தாக் அலி டிராபி
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 வடிவ கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி டிராபி குரூப் பி பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இதில் குறிப்பாக தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 57 ரன்கள் குவித்தார். இதில் ஷாருக்கான் 25 பந்துகளில் 39 ரன்களும், தற்போது சிஎஸ்கேவில் வாங்கப்பட்ட விஜய் சங்கர் 22 பந்துகளில் நான்கு சிக்ஸர்களோடு 42 ரன்கள் குவித்தார்.
இதில் ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் விஜய் சங்கர் மூன்று சிக்ஸர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பரோடா அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே பரோடா அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. விக்கெட்டுகளை இழந்த போதிலும் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களால் முடிந்த அளவு ரன்கள் குவித்து வெளியேறினார்கள்.
ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம்
இதில் அந்த அணியின் மிடில் வரிசை ஆட்டக்காரர் பானு பனியா 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் என 69 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பாக சென்னை அணிக்கு புதிதாக வாங்கப்பட்ட குர்ஜப்னீத் சிங் ஓவரின் பாண்டியா வெளுத்து வாங்கினார். இதில் ஒரே ஓவரில் 6,6,6,6,4,1 என 29 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:சிஎஸ்கே ஓனர் சீனிவாசன் அம்பயரை வைத்து மோசடி செய்தார்.. பிளின்டாப் விஷயம் மோசமானது – லலித் மோடி குற்றச்சாட்டு
இதனால் குருஜப்னீத் சிங் மூன்று ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 69 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹர்த்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்.






