சிஎஸ்கே ஓனர் சீனிவாசன் அம்பயரை வைத்து மோசடி செய்தார்.. பிளின்டாப் விஷயம் மோசமானது – லலித் மோடி குற்றச்சாட்டு

0
215
Dhoni

ஐபிஎல் தொடரில் பணம் தொடர்பாக மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்தில் இருக்கும் லலித் மோடி சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் பிசிசிஐ பொறுப்புகளில் இருந்த பொழுது சிஎஸ்கே அணிக்காக மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் தமக்கு சாதகமான உள்ளூர் நடுவர்களை சிஎஸ்கே போட்டிக்கு கொண்டு வந்ததாகவும், மேலும் இங்கிலாந்து வீரர் பிளின்டாப்பை வாங்குவதற்காக மற்ற அணிகளை ஏலத்தில் அதிக தொகைக்கு கேட்க வேண்டாம் என்று நெருக்கடி கொடுத்ததாகவும், அதை சீனிவாசனுக்காக தானே செய்ததாகவும் லலித் மோடி குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

அம்பயர்களை வைத்து மோசடி

இதுகுறித்து லலித் மோடி கூறும் பொழுது “அப்போது பிசிசியின் தலைமை ஸ்ரீனிவாசனுக்கு ஐபிஎல் தொடர் பிடிக்கவில்லை. அது பெரிய அளவில் செல்லும் என்று அவர் நினைக்கவில்லை. ஆனால் பின்பு அது பெரிய அளவில் சென்ற பொழுது எல்லோரும் ஐபிஎல் பொறுப்புக்குள் வந்தார்கள். அவர் செய்கின்ற காரியங்களுக்கு நான் எதிராக இருந்ததால் அவருக்கு நான் பெரிய எதிரியாக இருந்தேன். அவர் அம்பயர் பிக்ஸிங் செய்தார். அதை தானே செய்ததாக அவர் கூறினார்”

“நான் இதற்காக அவரை குற்றம் சாட்டுகிறேன். அவர் இப்படியான வேலைகளில் ஈடுபடுவர் என இரண்டு விஷயங்களை நான் நினைக்கவில்லை. ஆனால் சென்னையை சேர்ந்த நடுவர்கள் விளையாட்டில் இருக்கும் பொழுதுதான் என்னுடைய சந்தேகம் உருவானது. நான் இதை அம்பலப்படுத்த முயற்சி செய்தேன். இதைத்தான் பிக் சிங் என்று சொல்வார்கள்”

- Advertisement -

எனக்கு வேறு வழி இல்லை

“நாங்கள் ஏலத்தின் ரிங்கில் இருந்து, பிளின்டாப்பை ஸ்ரீனிவாசனுக்காக சிஎஸ்கே அணிக்கு எடுத்துக் கொடுத்தோம். ஆம் அதை நாங்கள்தான் செய்தோம். இது எல்லா அணிகளுக்குமே அப்பொழுது தெரியும். மேலும் ஸ்ரீனிவாசன் இல்லையென்றால் ஐபிஎல் நடக்க விடப்போவதில்லை. அவர் ஒரு முள் போல இருந்தார். எனவே பிளின்டாப்பை எடுக்க வேண்டாம் என மற்ற அணிகளிடம் கூறினோம்”

இதையும் படிங்க : ஹேசில்வுட் பேசினத வைச்சு அவதூறு பரப்பாதிங்க.. நாங்க ஒற்றுமையா இருக்கோம் – டிராவிஸ் ஹெட் விளக்கம்

“ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டதால்தான் நான் இப்படி செய்தேன். ஏனென்றால் நீங்கள் ஐபிஎல் போன்ற ஒரு பெரிய நிகழ்வை தனி ஆளாக நடத்தும் பொழுது எல்லா முள்ளையும் எடுத்தாக வேண்டும். ஒவ்வொரு வீரரும் மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -