தோனிய தவிர யாராலும் செய்ய முடியாதது.. ஆனால் பங்களாதேஷ் லிட்டன் தாஸ் மேஜிக் ரன் அவுட்

0
220
Das

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஃபார்மேட் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்நடைபெற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடரை சமநிலையில் வைத்திருந்தன.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று தொடரை யாருக்கென்று நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 174 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தரப்பில் குஷால் மெண்டிஸ் 86 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு, பதிரனா காயம் காரணமாக விளையாடாததால் இடம் பெற்ற, மலிங்கா போலவே பந்து வீசும் நுவன் துசாரா பெரிய சரிவை உண்டாக்கினார்.

இவர் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்ற, 146 ரன்கள் மட்டும் எடுத்து பங்களாதேஷ அணி ஆல் அவுட் ஆகி, சொந்த நாட்டில் இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை இழந்தது. சமீப காலத்தில் இரண்டு அணிகளும் பரம எதிரிகளாக மோதி கொண்டிருக்கும் நேரத்தில், இலங்கைக்கு இது முக்கியமான வெற்றியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்யும்பொழுது ஆட்டத்தின் கடைசிப் பந்தில் டசன் சனகா இரண்டு ரன்கள் எடுக்க முயற்சி செய்தார். இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பராக அதிரடி பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் செயல்பட்டார்.

இரண்டு ரன்களுக்கு வேகமாக டசன் சனகா வந்த பொழுது, ஸ்டெம்பை விட்டு பந்து தூரமாக த்ரோ செய்யப்பட்டது. ஆனால் பந்தை சென்று பிடித்த லிட்டன் தாஸ், ஸ்டெம்பை பார்க்காமலே, கையால் பின்பக்கமாகப் பந்தை வீசி, ஸ்டெம்ப்பை அடித்து சனகாவை ரன் அவுட் செய்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024.. சிஎஸ்கே பிளேயிங் XI-ல் எந்த 4 வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது

இந்த வகையான ரன் அவுட் செய்வதில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராக வல்லவர். குத்து மதிப்பாக இல்லாமல், மிகச் சரியாகவே இப்படியான ரன் அவுட்டுகளில் செயல்படுவார். நேற்று லிட்டன் தாஸ் இப்படியான ஒரு அருமையான ரன் அவுட்டை செய்தார். இதில் ஸ்டெம்புக்கு வலது பக்கம் சென்று ஸ்டெம்ப்பை பார்க்காமல் ரன் அவுட் செய்திருப்பதால், தோனி செய்த இப்படியான ரன் அவுட்டுகளை விட இது சிறப்பானதாக தெரிகிறது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.