வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நல்ல நிலையில் இருந்த பங்களாதேஷ் அணி முதல் இன்னிசில் 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியிருக்கிறது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 83 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து நல்ல நிலையில் இருந்தது. எனவே முதல் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மேற்கொண்டு 81 ரன்கள் மட்டுமே எடுத்து மீதம் இருந்த எட்டு விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் சுருண்டது. பங்களாதேஷ் அணிக்கு அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் சத்மன் இஸ்லாம் 137 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து மெஹதி ஹசன் மிராஸ் 36, நஜ்மல் சான்டோ 22 ரன்கள் எடுத்தார்கள்.
இறுதியாக பங்களாதேஷ் அணி 71.5 ஓவரில் 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாமர் ஜோசப் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கு அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணிக்கு மைக்கேல் லூயிஸ் 47 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : பும்ரா என்கிட்ட இத செய்ய வேணானு சொன்னாரு.. அதுதான் ஆஸி டெஸ்ட்ல சிறப்பா செயல்பட காரணம் – முகமது சிராஜ் பேட்டி
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு களத்தில் கேப்டன் பிரத்வெயிட் 115 பந்துகளில் 33 ரன்கள், கேசி கார்தி 60 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல முன்னிலைகிடைத்திருக்கிறது.