58 பந்தில் ஆஸிக்கு எதிராக சதம்.. 13வயது இந்திய அதிசய வீரர் சாதனை.. சச்சின் யுவராஜ் சிங்கை தாண்டி ரெக்கார்ட் செய்தவர்

0
88
Suryavanshi

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் அண்டர் 19 யூத் டெஸ்டில் 13 வயதான இந்திய இளம் வீரர் அபினவ் சூரியவன்சி புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

இந்திய அண்டர் 19 அணி ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிராக யூத் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடிக் கொண்டு வருகிறது. இதில் இந்தியாவின் அதிசய இளம் வீரரான அபினவ் சூரியவன்சி அண்டர் 19 கிரிக்கெட்டில் அசத்தல் சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

அண்டர் 19 கிரிக்கெட்டில் அதிவேக சதம்

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணி முதலில் பேட்டிங் செய்து 294 ரன்கள் எடுத்தது. இதை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு அபினவ் சூரியவன்சி அதிவேகமாக அரைசதம் அடித்து உலக சாதனை நேற்றே படைத்திருந்தார். நேற்று அவர் 47 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய அவர் 58 பந்தில் சதம் அடித்து குறைந்த வயதில் அதிவேகமாக அண்டர் 19 கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர் என்கின்ற அரிய சாதனையை படைத்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு அண்டர் 19 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக நஜ்முல் சாந்தோ 14 வயது 241 நாட்களில் சதம் அடித்திருந்தார். தற்போது அபினவ் சூரியவன்சி 13 வயது 188 நாட்களில் சதம் அடித்து சாதனையை முறியடித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் படைத்த சாதனை

மேலும் ரஞ்சி கிரிக்கெட்டில் 12 வயதில் மும்பை அணிக்கு எதிராக பீகார் அணிக்காக அறிமுகமானார். இதன் மூலம் 15 வயதில் ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி இருந்த யுவராஜ் சிங் மற்றும் சச்சின் சாதனைகளை இவர் ஏற்கனவே முறியடித்திருந்தார்.

இதையும் படிங்க : கம்பீர் கோலிக்கு செஞ்சது சரி கிடையாது.. நேற்று பிளானில் எனக்கு உடன்பாடு இல்லை – கவாஸ்கர் விமர்சனம்

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிராக மிகக் குறைந்த வயதில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்கின்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறார். பீகார் மாநில கிரிக்கெட்டில் இருந்து எதிர்கால இந்திய அணிக்கு மிக திறமையான ஒரு வீரர் உருவாகி வருகிறார் என இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

- Advertisement -