பங்களாதேஷ் அணி ஃபாலோ-ஆன் ஆகியும்.. இந்திய அணி கொடுக்காதது ஏன்?.. பக்கா பிளானில் ரோகித் கம்பீர்

0
729
Rohit

இன்று முதல் டெஸ்டில் பங்களாதேஷ் அணி ஃபாலோ ஆன் ஆன பொழுதிலும் இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடியது. இது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், இந்திய அணி சிறந்த நகர்வை மேற்கொண்டு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் முன்னிலை தரக்கூடாது. அதாவது இந்திய அணி 376 ரன்கள் எடுத்திருக்க, பங்களாதேஷ் அணி 177 ரன்கள் எடுத்திருந்தால், இந்திய அணி 199 ரன்கள் முன்னிலை மட்டுமே பெற்று எடுக்கும். இதனால் பங்களாதேஷ் அணி ஃபாலோ ஆன் ஆகி இருக்காது. ஆனால் 149 ரன்கள் எடுத்ததால் ஃபாலோ ஆன் ஆனது.

- Advertisement -

ஃபாலோ ஆன் கொடுக்காத இந்திய அணி

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்திருக்க, பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 227 ரன்கள் முன்னிலை கிடைத்தது. 200க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை கொடுத்ததால் பங்களாதேஷ் அணி ஃபாலோ ஆன் ஆனது.

ஃபாலோ ஆன் ஆகும்பொழுது மேற்கொண்டு இரண்டாவது இன்னிங்சில் யார் பேட்டிங் செய்வது என்கின்ற முடிவை இந்திய அணி எடுக்கலாம். 227 ரன்கள் முன்னிலை இருந்தபோது, இந்திய அணி பங்களாதேஷை தொடர்ந்து பேட்டிங் செய்ய சொல்லாமல், தானே இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய வந்தது.

- Advertisement -
  • ஃபாலோ ஆன் கொடுக்காத காரணம்

இந்த போட்டி சென்னையில் நடைபெறுகின்ற காரணத்தினால் மிகுந்த வெப்பமான சூழ்நிலை காணப்படுகிறது. எனவே பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்தாக வேண்டும். அதே சமயத்தில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை மீண்டும் பந்து வீச கொண்டு வரும் பொழுது, அவர்கள் அதிகபட்சமாக களைப்படைவார்கள். இது இந்திய அணி பேட்டிங் செய்யவும், பங்களாதேஷ் வீரர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்புகளையும் உண்டாக்குகிறது.

இதையும் படிங்க: அவுட்டே இல்லாம வெளியேறிய விராட்.. கவிழ்த்திய கில்.. கடுப்பான ரோகித்.. களத்தில் நடந்த பரிதாபம்

அடுத்து இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்து பங்களாதேஷை சுருட்டி விட்டால், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் ஆனால் பேட்டிங் பயிற்சி கிடைக்காது. ஏற்கனவே நீண்ட ஓய்வில் இருந்து வருவதால் இந்தியா பேட்ஸ்மேன்களுக்கு போட்டி பயிற்சி மிகவும் முக்கியமாக இருக்கிறது. எனவே இந்த மூன்று முக்கிய காரணங்களுக்காக இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கவில்லை.

- Advertisement -