2025 அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் இரண்டு மிக முக்கியமான வீரர்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அணித் தேர்வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்தத் தொடரில் 8 ஆசிய அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய நாடுகள் இடம் பெற்று இருக்கின்றன. இன்னொரு பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹாங்காங் அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பிரிவு சற்று கடினமானதாகவே இருக்கிறது.
மேலும் ஆசியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அதே சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்து 20 வருடத்திற்கு மேல் ஆகியும் மாறிவரும் கிரிக்கெட்டுக்கு தகுந்த வகையில் பங்களாதேஷ் கிரிக்கெட் உயரவில்லை. தற்பொழுது இதுவும் விமர்சனமாக இருக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆசியக் கோப்பை பங்களாதேஷ் அணியில் முன்னாள் கேப்டன் நஜ்முல் சாந்தோ மற்றும் சுழல் பந்துவீச்சு அதிரடி ஆட்டக்கார ஆல்ரவுண்டர் மெகதி ஹசன் மிராஸ் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் பங்களாதேஷ் அணியில் இரண்டு சிறந்த வீரர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இதையும் படிங்க : தம்பி வைபவ்.. நீ பெரிய வீரராக வர வேண்டும், என்றால் யார் பேச்சையும் கேட்காதே.. முன்னாள் சிஎஸ்கே வீரர் அறிவுரை
பங்களாதேஷ் அணி : லிட்டன் தாஸ் (கே), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அஹமத், தகிஸ்ன், தகிஸ்ன், அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷைஃப் உதீன்.