60 வருடம் கழித்து ரோகித் புது ஐடியா.. பங்களாதேஷின் 42 வருட முடிவுக்கு பதிலடி.. கான்பூர் 2வது டெஸ்ட்

0
50
Rohit

தற்போது கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் 60 வருடம் கழித்து ஆச்சரியமான முடிவை இந்திய அணி எடுத்திருக்கிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணி நிர்வாகம் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறக்கிய அதே அணியை களம் இறக்கி ஆச்சரியப்படுத்தியது. அதே சமயத்தில் பங்களாதேஷ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.

- Advertisement -

டாஸ் வென்றதில் வரலாற்று முடிவு

கான்பூர் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங் செய்யும் என்று இருக்க ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். அந்தப் போட்டி டிராவில் முடிவடைந்திருந்தது.

தற்பொழுது ரோகித் சர்மா 60 வருடங்களுக்குப் பிறகு இப்படியான முடிவை எடுத்திருக்கிறார். மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற அணி 42 வருடங்களுக்குப் பிறகு பந்துவீச்சை தேர்வு செய்த வரலாறு பங்களாதேஷ் படைத்தது. தற்பொழுது ரோகித் சர்மா அதையே பின்பற்றி வித்தியாச முடிவை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

முதல் செஷன் முடிவு

இன்றைய போட்டிக்கான ஆடுகளத்தில் பவுன்ஸ் குறைவாக இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜாகிர் ஹசன் 0, ஷத்மன் இஸ்லாம் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இந்த இரண்டு விக்கெட்களையும் ஆகாஷ் தீப் கைப்பற்றி நல்ல துவக்கத்தை ஏற்படுத்தினார்.lஇதையும் படிங்க : இன்னும் 35 ரன்கள்.. சச்சினின் உலக சாதனையை உடைக்கும் விராட் கோலி.. முதல் வீரராக ரெக்கார்டு

இதற்கு அடுத்து வந்த மோமினுல் ஹக் 17, கேப்டன் நஜ்முல் சாந்தோ 28 ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். இந்த ஜோடி 83 பந்துகளில் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. தற்போது இரண்டு விக்கெட் இழப்புக்கு பங்களாதேஷ் அணி 74 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் சரியாக மதிய உணவு இடைவேளையின் போது மழையும் சேர்ந்து வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -