பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பங்களாதேஷ் அணி ஆரம்பம் மூன்று விக்கெட்டுகளை சீக்கிரத்தில் கைப்பற்றினாலும் அதற்குப் பிறகு பாகிஸ்தான் துணை கேப்டன் சவுத் ஷகில் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரிடமும் சிக்கியது. இவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி சொந்தங்கள் கிடைத்தார்கள்.
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அந்த அணிக்கு சவுத் ஷகில் 141 ரன், முகமது ரிஸ்வான் ஆட்டம் இழக்காமல் 171 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் வந்து வீச்சாளர்களால் மேற்கொண்டு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மீது ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
இதைத் தொடர்ந்து தங்களது பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன்கள் குவித்தால் மட்டுமே போட்டியில் தோல்வியிலிருந்து தப்பிக்க முடியும் என்கின்ற நிலையில் பங்களாதேஷ் அணி இருந்தது. இந்த நிலையில் நேற்று இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 27 ரன்கள் எடுத்திருந்தது.
பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸ்
இன்று தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சத்மன் இஸ்லாம் 183 பந்துகளில் 12 பவுண்டரிகள் உடன் 93 ரன்கள் எடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் நஜீமுல் சாந்தோ 16 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய முன்னாள் கேப்டன் மொமினுல் ஹக் 76 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஷாகிப் அல் ஹசன் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்த நிலையில் ஒரு முனையில் பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் முஸ்பிகியூர் ரஹீம் மிகவும் பொறுப்புடன் பொறுமையாக விளையாடினார். ஆனால் பேட்டிங் வரிசையில் ஏழாவதாக வந்த லிட்டன் தாஸ் கடைசி நேரத்தில் அதிரடியில் மிரட்டினார். அவர் 58 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார். இவருடன் சேர்ந்து விளையாடிய முஸ்பிகியூர் ரஹீம் 122 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.
தற்போது முதல் டெஸ்டில் மூன்று நாட்கள் முடிவடைந்திருக்கும் பொழுது பங்களாதேஷ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்சை விட 132 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. மேலும் கைவசம் ஐந்து விக்கெட்டுகளையும் வைத்திருக்கிறது.
இதையும் படிங்க : 94 வருட சாதனை.. இலங்கை அணிக்கு எதிராக.. இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் உடைத்தார்.. முதல் டெஸ்டில் ஆதிக்கம்
நாளை தொடர்ந்து பங்களாதேஷ் அணி முதல் செஷன் மற்றும் விளையாடி ஆல் அவுட் ஆனால் கூட, இந்தப் போட்டி டிரா ஆகவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்புக்கு பங்களாதேஷ் அணி தற்போது வரை சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் சேஷாத் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.