183 ரன்.. 9 விக்கெட்.. போராடும் பங்களாதேஷ் அணி.. வெஸ்ட் இண்டீஸ் கலக்கல் பவுலிங்.. முதல் டெஸ்ட்

0
43
Bangladesh

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி போராடி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருக்கிறது.

பங்களாதேஷ் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்ற வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக ஆன்டிகுவா நார்த் சவுண்ட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி துவங்கியது.

- Advertisement -

450 ரன் குவித்த வெஸ்ட் இண்டீஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிக்கேல் லூயிஸ் 97, அலிக் ஆதனஸ் 90, ஜஸ்டின் கிரீவ்ஸ் 115, கெமார் ரோச் 47 ரன்கள் எடுத்தார்கள்.

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 144.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 450 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியின் தரப்பில் ஹசன் மக்மூத் 3, டஸ்கின் அகமத் மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

போராடும் பங்களாதேஷ் அணி

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மக்மூத் ஹசன் ஜாய் 5, ஜாகிர் ஹசன் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து அதிகபட்சமாக முஃமினுள் ஹக் 50, ஜாகிர் அலி 53, லிட்டன் தாஸ் 40, மெஹந்தி ஹசன் மிராஸ் 23, தைஜுல் இஸ்லாம் 25 ரன்கள்எடுத்தார்கள்.

இதையும் படிங்க : கோலியை கிங்னு இதுக்குதான் சொல்றாங்க.. 15 வருஷத்துல இத செஞ்சு நான் யாரையுமே பாக்கல – ரவி சாஸ்திரி பேட்டி

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தற்பொழுது 181 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப் 3, ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி சீக்கிரம் ஆல் அவுட் செய்து அதிரடியாக சில ரன்கள் எடுத்து மீண்டும் சீக்கிரமாக பங்களாதேஷ அணியை விளையாட வைத்து ஆல் அவுட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -