நியூசி முதல் டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. திலக் இடத்தில் யார்?.. பேட்டிங் வரிசையின் மாற்றம் – முக்கிய முடிவுகள்

0
7
Hardik

இன்று நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.

இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நாக்பூரில் துவங்குகிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பு விளையாடும் தொடர் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.

- Advertisement -

முக்கிய வீரர்கள் காயம்

இந்திய அணியில் தற்போது காயத்தின் காரணமாக திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெறவில்லை. இவர்களுடைய இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிகிறது. காயம் அடைந்திருக்கும் திலக் வர்மா இடத்தில் இஷான் கிஷான் விளையாடுவார் என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் நேற்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

பேட்டிங் வரிசையின் நீளம்

டி20 உலக கோப்பைக்கு முன்பு விளையாடுவதால் இந்திய அணி தங்களது அணியின் பலத்தை முழுமையாக கொண்டு விளையாடும். எனவே பேட்டிங் வரிசை 8 வரையில் அமைக்கப்படும். இரண்டு ஸ்பின்னர்கள் விளையாடுவது கடினமாகவே இருக்கும். எனவே வருண் சக்கரவர்த்தி மட்டுமே அணியில் இடம் பெறுவார்.

இதையும் படிங்க : இந்திய அணி ரொம்ப பலவீனமா இருக்கு.. அவரை கட்டாயம் அணியில் சேருங்க.. 2027 WC ரொம்ப சிக்கல் ஆயிடும் – முகமது கைப்

இந்திய பிளேயிங் லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா அக்சர் படேல், ரிங்கு சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.

- Advertisement -