143 ரன்.. 10 விக்கெட் கைவசம்.. பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்விகள் உறுதி.. பங்களாதேஷ் அணி வலிமையான முன்னிலை

0
453
Bangladesh

பாகிஸ்தான அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கு மிக அதிகபட்ச வாய்ப்பில் இருக்கிறது. இதன் மூலம் தொடரையும் இழக்கும் அபாயத்தில் இருக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது. மேலும் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற சர்வதேச முதல் டெஸ்ட் வெற்றியாகவும் அது பதிவானது.

- Advertisement -

வாய்ப்பை கோட்டை விட்ட பாகிஸ்தான்

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டது. இதற்கு அடுத்து இரண்டாவது நாள் டாஸ் தோற்று பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு சயும் அயூப் 58, கேப்டன் ஷான் மசூத் 57, ஆகா சல்மான் 54 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. மெகதி ஹசன் மிராஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

தனது முதல் இன்னிசை விளையாடிய பங்களாதேஷ் அணி 26 ரன்களுக்கு முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்த இடத்தில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் பாகிஸ்தான் அணி கோட்டை விட்டது. லிட்டன் தாஸ் மிகச் சிறப்பாக விளையாடி 138 ரன்கள் எடுக்க, அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு தந்த மெகதி ஹசன் மிராஸ் 78 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் தப்பித்து 262 ரன்கள் எடுத்தது. குர்ரம் சேஷாத் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு கைவிட்ட அதிர்ஷ்டம்

இந்த நிலையில் 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 172 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு தாக்குப் பிடித்து விளையாடிய ஆகா சல்மான் மட்டுமே 47 ரன் எடுத்தார். இந்த முறையும் பாபர் அசாம் 11 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் தந்தார். பங்களாதேஷ் தரப்பில் ஆசான் முகமது 5 நாகித் ராணா 4 விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் பங்களாதேஷ் அணிக்கு 185 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது.

இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹஸன் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கம் தந்தார். பங்களாதேஷ் அணி விக்கெட் இழப்பில்லாமல் ஏழு ஓவர்களில் 42 ரன்கள் எடுத்த பொழுது வெளிச்சமின்மை காரணமாக நான்காவது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க : ஒரு ஓவரில் 6 சிக்ஸ்.. 2 சதம்.. ஐபிஎல்-ல் இவர் இருக்கும் அணியில் விளையாட விரும்பறேன் – பிரியன்ஷ் ஆர்யா பேட்டி

தற்போது பங்களாதேஷ் அணியின் கையில் 10 விக்கெட்டுகள் முழுமையாக இருக்கிறது. அதே சமயத்தில் வெற்றிக்கு 143 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் நாளை ஐந்தாவது நாள் முழுமையாக இருக்கிறது. எனது இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை 2-0 என பங்களாதேஷ் கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உண்டு. முதல் போட்டியில் வென்றதால் இந்த போட்டியை தோற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தவுடன், தற்பொழுது தொடரையும் இழந்து இரண்டு வரலாற்றுத் தோல்விகளை பாகிஸ்தான் அணி பெற இருக்கிறது.

- Advertisement -