வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்ட பங்களாதேஷ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பங்களாதேஷ் அணி மூன்று படிப்பு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் வென்றது. பங்களாதேஷ் இரண்டாவது போட்டியை வென்று தொடரை சமன் செய்திருக்கிறது.
ஆச்சரியம் தந்த பங்களாதேஷ்
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சத்மன் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு நல்ல நிலையில் இருந்து திடீரென சரிந்து 146 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு கேசி கார்தி 40 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
பங்களாதேஷ் வரலாற்று வெற்றி
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு இறுதி கட்டத்தில் வந்த பேட்ஸ்மேன் ஜாகீர் அலி அதிரடியாக விளையாடி 91 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணி 268 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் மற்றும் அல்சாரி ஜோசப் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து 287 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 185 ரங்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த கவிம் ஹாட்ஜ் 55 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் தைஜுல் இஸ்லாம் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இறுதியாக பங்களாதேஷ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : பாக் அணி ஈகோவை விட வேண்டும்.. எங்க பிளேயர்ஸ் கேட்டா இதான் சொல்வாங்க – ஹர்பஜன் சிங் பேட்டி
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பங்களாதேஷ் அணிக்கு 15 வருடங்கள் கழித்து முதல் வெற்றி கிடைத்திருக்கிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பங்களாதேஷ் அணி எட்டாவது இடத்திற்கு உயர வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.