அந்த டிபார்ட்மெண்ட்ல நெருப்பு மாதிரி இருக்கோம்.. கண்டிப்பா இந்திய அணியை வீழ்த்துவோம் – பங்களாதேஷ் சோரிஃபுல் இஸ்லாம் சவால்

0
101
Shoriful

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் முதல் டெஸ்ட் போட்டி துவங்கி இருக்கும் நிலையில், பங்களாதேஷ் வீரர்களின் சவால் பேச்சுகளால் தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த வகையில் பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் சோரிஃபுல் இஸ்லாம் தன் பங்குக்கு இந்திய அணியை வீழ்த்துவோம் எனக் கூறியிருக்கிறார்.

சோரிஃபுல் இஸ்லாம் பாகிஸ்தான் தொடரில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது வந்துள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில்தான் இந்திய அணியை பங்களாதேஷ் அணியால் டெஸ்ட் தொடரில் வீழ்த்த முடியும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

பங்களாதேஷ் கேப்டன் விடுத்த சவால்

தற்போது பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நஜ்முல் சாந்தோ இருக்கிறார். அவர் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்பாக பங்களாதேஷ் விமான நிலையத்தில் இந்திய அணியை தங்களால் வீழ்த்த முடியும் என்றும், இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியை வீழ்த்தவே விளையாடுவோம் எனவும் கூறியிருந்தார்.

மேலும் பங்களாதேஷ் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியை வெல்வோம் என்பது மட்டும் அல்லாமல் தொடரையே வெல்வோம் என்பதாக தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தற்போது தொடரில் இடம்பெறாத பங்களாதேஷ் வீரர் சோரிஃபுல் இஸ்லாமும் இணைந்து இருக்கிறார்.

- Advertisement -

முன்ன இல்லாத அந்த ஆதரவு

இதுகுறித்து சோரிஃபுல் இஸ்லாம் கூறும் பொழுது “எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது பார்மிலும் ரிதத்திலும் இருக்கிறார்கள். முன்பும் எங்களிடம் வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள் ஆனால் பெரிய அளவு அவர்களுக்கு ஆதரவு இல்லை. ஆனால் தற்போது இருக்கும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது”

“நாங்கள் இந்திய அணியை நிச்சயம் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறோம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது போல இந்திய அணிக்கு எதிராகவும் விளையாடி தொடரை வெல்வோம். நான் தற்பொழுது பந்து வீச ஆரம்பித்து விட்டேன். இந்தியாவிற்கு டி20 தொடர் விளையாட பங்களாதேஷ் அணி புறப்படும் பொழுது நான் தயாராகி விடுவேன் என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -